அந்தி மயங்குகின்ற வேளை
அண்ணாந்து பார்த்தேன் வானத்தை
அழகான சூரியன் செந்நிறத்தில்
மேல்திசை நோக்கி செல்கிறான்
செல்லும் அவனிடம் சொன்னேன்
கொஞ்சும் மழலையாம் கவின்
என் அன்புபேரன் அங்குள்ளான்
சொல்வாய் அவனிடம் என்வாழ்த்தை
செந்தாமரை அவன் முகம்
அதில் கொவ்வை செவ்வாய்
குமிழும் சிரிப்பு புன்சிரிப்பு
தவழும் நாளில் நானங்கே
நீ போய தெரிவி
என் வருகையை அங்கே
தொடர்ந்தே நானும் வருவேனே
கொஞ்சி பேசி விளையாட
ஆஹா என்றான் சூரியனே
சூரியனுக்கே சூரியன் தூதா
என்றே என்னிடம் கேட்டான்
ஆமாம் ஆமாம் என்றேன்
சூரியன் அங்கே சென்றானா
வாழ்த்தை நன்றாய் சொன்னானா
ஆவல் கொண்டே காத்துள்ளேன்
நாளைய சூரிய விடியலுக்கே
ஆஹா விடிந்தது பொழுதுமே
அன்பு சூரியன் வந்தானே
கவினை பற்றி சொன்னானே
தேனை காதில் பாய்ச்சினானே
இந்தா கவினின் அன்புமுத்தம்
என்றே தந்தான் சூரியனே
தெவிட்டா இன்பம் தந்தானே
தினமும் தருவேன் என்றானே
என் கண்ணில் மின்னியது
ஆயிரம் வாட்ஸ் பல்பு
முகத்தில் ஒளிர்ந்தது
முப்பத்திரண்டு பற்கள்
கவின் என் செல்லம்
அவன் தம் பெற்றோர்
அனைவரும் நலமுடன் வாழ
ஆயிரம் வாழ்த்து என் உள்ளத்தில்
4 comments:
Poem is awesome!!
Excellent.
really mind blowing n touching poem. It depicts your true n pure love for your wonderful grandson.
Pl do write more n more poems.
I am a NEW RAMA within you. luv u so much. Paddha
Thankyou padda
Post a Comment