Tuesday, December 28, 2010

வாழ்க்கை தத்துவம் - 1

வாழ்க்கை தத்துவம் - 1

வாழ தெரிய வேணும் கண்ணே வாழ தெரிய வேணும்
தெரிந்து கொள்ள முயலனும் கண்ணே
தெரிந்து கொள்ள முயலனும்
தேவை நமக்கு என்ன வென்றே
இருக்க இடமும் உடுக்க உடையும்
பசிக்கு உணவும் தாகத்துக்கு நீரும்
தானே அவசிய தேவை என்று
தெரிந்து கொள்ள வேணும்

மழையில் இருந்தும் வெயில்லில் இருந்தும்
காத்துக்க வேணும் அதுக்கு
வசிக்க ஒரு வீடு போதும்
பல வீடு எதுக்கு கண்ணே
அது கொள்ளைக்கு சமமாகும் புரிஞ்சிக்கோ

வெப்ப தட்ப மாறுதலுகேற்றபடி
உடை வேணும் கண்ணே உடை வேணும்
தேவைக்கு உடை போதும்
படோடோபதுக்கு எதற்கும் கண்ணே
அதையுமே புரிஞ்சிக்கோ கண்ணே புரிஞ்சிக்கோ

பசிக்கு உணவு வேணும் கண்ணே
அளவுக்கு மீறினா அதுவுமே விஷந்தா கண்ணே
அளவோடு சத்தோடு ஆரோக்கியமான உணவோடு
நீரையும் சாப்பிடு கண்ணே
அளவுக்கு அதிகமானா
உடல் நலத்துக்கு கேடு கண்ணே

புரிஞ்சிக்கோ கண்ணே புரிஞ்சிக்கோ
இதை புரிஞ்சிண்டு நீயும் நடந்துக்கிட்ட
உனக்கு புடிச்சிருந்தா இன்னு நான்
சொல்றேன் கண்ணு அடுத்த நூலிலே
கேட்டுக்கோ கண்ணே கேட்டு நடந்துக்கோ

Monday, December 27, 2010

jayadevar contd.

ஜகநாத க்ஷேத்ரத்துக்கு அடுத்துள்ள சில பகுதிகள் கிரவுஞ்ச மன்னனது சுவாதீனத்தில் இருந்தது. கிரவுஞ்ச மன்னன் சில ஆட்கள் புடை சூழ வேட்டையாட காட்டுக்குச் சென்றான். நீர் வேட்கை எடுக்கவே நீர் நிலையை தேடி வந்தான். இறைவனனின் கருணை தான் என்ன என்று பாருங்களேன். அவனுக்கு நீர் வேட்கை ஏற்பட்டு அங்கு வர அந்த பாழும் கிணறு தென்படதொடு அல்லாமல் ஏதோ ஓசை கேட்கிறதே என்று கிணற்றில் எட்டிப் பார்க்க அங்கு வீசிய ஒளியில் அவன் கண்கள் சற்றே மறைத்தன. பின்னர் கூர்ந்து கவனிக்க ஒரு தபஸ்வி மகா தேஜசுடன் கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டான்.

சிவபக்தனான அரசன் உடனே சிவனை நினைத்து மகாதேவா மகான் யாரோ தவறி விழுந்திருக்கிறார், அவரை ஆண்டு அருள் புரிவாயாப்பா என்று கிணற்று அருகே நெருங்கி தான் இறங்க முயற்சி செய்தான். இதற்கிடையே இரு வீரர்கள் கிணற்றில் விழுந்து கிடந்த ஜெயதேவரை கரை சேர்த்தனர். அப்போது தான் அரசன் கவனித்தான் அவரது கைகளும் கால்களும் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அரண்டு போனான். நல்ல அரசாட்சியிலே இப்படியும் நடைபெற்றதே இதென்ன கொடுமை, இத்தகைய மகானுக்கு இவ்வளவு பெரிய தீங்கை விளைவித்தது யாராய் இருக்கக்கூடும் என்று கதறி அரற்றினான் மன்னன். அப்போதும் ஜெயதேவரின் சமாதி நிலை கலையவில்லை.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த அவர் செவிகளில் மன்னரின் சொற்கள் விழவும் மன்னா கோபம் வேண்டாம், யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. என் ஊழ்வினையும் இறைவன் திருவுள்ளமும் அப்படி இருக்க யார் தான் என்ன செய்ய முடியும்? தவிரவும் இறைவனைபேரருளின் முன்பு இந்த உடலுக்கு ஏற்பட்ட இந்த சிறு துன்பம் என்ன செய்து விட முடியும் என்று கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்த மன்னரை தேற்றினார் ஜெயதேவர்.

உடனே மன்னருக்கு மகா வியப்பு. இவர் யார் என்று தெரியவில்லையே, முற்றும் துறந்த மெய்ஞானி தான் போல இருக்கு. கைகால்களை வெட்டப்பட்ட நிலையிலும் இவ்வளவு சாந்தமா பெரியார்கள் அனைவரும் இப்படித்தான் வாழ்கின்றனர் என்று அவரை பணிந்து நின்றான். பின்னர் மெல்ல பல்லக்கிலே ஏற்றி அழைத்துச் சென்று தன குருவாக ஏற்றுகொண்டான். அரசவை மருத்துவர்கள் அவர்கள் காயங்களுக்கு சிகித்சை அளித்தனர். மன்னனும் இவருக்கு பணிவிடை செய்வதே தன் வாழ்வில் முக்தி என கருதி அவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தான்.

ஜய்தேவரோ, மன்னா , உன் கடமையை நீ செய்ய வேண்டும், உன்னை நம்பி உள்ள குடிமக்களின் நலன் தான் ஒரு கொற்றவனுக்கு அழகு. முதலில் நீ கடமையை செய் பின்னர் ஆத்ம விசாரணை நடத்தலாம் என்று கூறி ராஜ காரியங்களை நடத்த வேண்டி அதற்கான வழிகளையும் போதித்தார். அர்ஜுனன் எவ்வாறு கண்ணனின் கீதா உபதேசத்தில் கட்டுப்பட்டு கடமையைச் செய்ய எழுந்தானோ அது போல் கிரவுஞ்ச மன்னனும் ஜெயதேவரின் நல்லுபதேசத்தை ஏற்று கடமை கவனிக்கச் சென்றான்

Monday, December 20, 2010

ஒருநாள் ஜெயதேவர் காலையில் நீராட சென்றவர் அங்கே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். ஜகன்னதபுரத்தை அடுத்துள்ள கிராமத்தில் வசிப்பவரான பகவன்தாஸ் என்ற வியாபாரி அவரது புகழை கேட்டிருந்ததால் அவரை எப்படியாவது தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாட பூஜை செய்து அவரிடம் உபதேசம் பெற விரும்பினார். அதற்கேற்றாற்போல் நிஷ்டையில் இருந்த ஜெயதேவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார். நிஷ்டை கலையும் வரை காத்திருந்து பின்னர் தம்மோடு வந்து தன் இல்லாததைப் புனிதமாக்கா வேண்டும் என்று வேண்டவே தெய்வப்பணிக்கே தன்னை அர்ப்பிக்க நினைத்த அவர் வியாபாரியின் வேண்டுகோளை ஏற்று அவருடன் சென்று அவருக்கு மந்திர உபதேசம் கொடுத்து ஞான மார்கத்தையும் போதித்தார். பின்னர் ஜெயதேவரின் திருப்பணிக்காக ஆயிரம் வராகனையும் பத்மாவதி தேவிக்கு சில உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து தன் வேலையாட்கள் சிலருடன் தேரில் அவரை வழி அனுப்பி வைத்தார்.

அவர் திரும்பி வரும்போது வழியில் ஒரு அடர்ந்த காடு வந்தது. அவரது கிராமத்துக்கு இன்னும் சில காத தூரமே இருந்த நேரத்தில் திடீரென்று விசித்திரமான சப்தம் கேட்டது. தேர் குதிரைகளும் தேர் பாகனும் பயந்து விட்டனர். அப்போது அங்கு வந்த கொள்ளை கூட்டத்தார் அங்கு சூழ்ந்து கொள்ள தேர்ப் பாகன் இறங்கி ஓடி விட்டான். ஜெயா தேவரும் பொருளைப் பற்றி கவலை படாமல் அவர்களே எடுத்து செல்லட்டும் என்று இறங்கி நடக்க ஆரம்பித்தார். பொருளை பற்றி கவலை படாத ஞானி அவர் என்பது தீய செயல்களில் ஈடுப்பாடிருக்கும் கள்வர்களுக்கு எங்கே புரிய போகிறது? அவர்கள் ஜெயதேவர் இறங்கி நடந்தவுடன் ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வரத்தான் போகிறார் என்று தப்பிதமாக புரிந்துக் கொண்டு என்ன சொல்லியும் கேட்காமல் அவரது கைகளையும் கால்களையும் வெட்டி ஒரு பாழும் கிணற்றில் அவரை தூக்கி போட்டு விட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.

கை கால்கள் வெட்டப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட கிணற்றில் விழுந்த ஜெயதேவர் வலியினால் துன்பபட்டலும் இறைவன் நாமத்தை உச்சரிக்க மட்டும் மறக்கவில்லை. இறைவனை பாடிக் கொண்டிருந்தார். இரத்தம் அதிகமாக வெளியேற வெளியேற அவரது சக்தி குறைந்து நினைவிழக்கும் நிலையிலும் அவரது உள்ளம் நீல வண்ண கண்ணனை , மச்சாவதார மூர்த்தியை நினைத்து கொண்டு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாகமாக நினைவை இழந்து கொண்டிருந்த அவருக்கு பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த எம்பெருமானின் திருவடி சேவையை கண்டு மனங்குளிர்ந்து கொண்டு இருந்தார். இப்போது முற்றிலும் சமாதி நிலை அடைந்துவிட்டார்.

இது இப்படி இருக்க அங்கு பத்மாவதி காலையில் சென்ற கணவர் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று ஒரு புறம் கவலையாகவும் மறுபுறம் தியானத்தில் அமர்ந்தால் அவருக்கு நேரம் போவதே தெரியாது வந்து விடுவார் என்று சமாதானமுமாக இருந்து கொண்டு இருந்தார். இரவு வந்தது, அடுத்த நாள் பொழுது விடிந்தது, ஆயிட்ட்று நாட்கள் ஒன்றாயிற்று இரண்டாயிற்று ஜெயதேவர் வந்த பாடில்லை. அக்கம்பக்கத்தவர் அவர் ஏதாவது குகையில் தியானம் பண்ணி கொண்டு இருப்பார் வந்து விடுவார் என்று சமாதான படுத்தினார்கள்.

பிறகு என்ன நடந்தது. பொறுத்திருந்து பார்கலாமா அன்பர்களே.
கீத கோவிந்தம் (அஷ்டபதி) கவிகளை இயற்றும்போதே அந்த கிராம வாசிகள் கவிதையை கற்று காதலாகி கசிந்து உருகி கண்ணீர் மல்கி பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கையில் ஒருநாள் பூஜைகளை முடித்து விட்டு பக்தி பரவசத்தில் தன்ன மறந்து 10 வது சர்கம் 19 வது அஷ்டபதியில் ப்ரியே சாருசீலே என்ற பல்லவியுடன் கூடிய பாடலிலே தம்மையும் அறியாமல் ஹே ராதே, விரகத்தினால் தவிக்கும் என் சிரத்திலே உன் பனிமலர் போன்ற தாமரை தளிர் பதங்களை வை " என்று வேண்டுவதாக அமைந்துவிட திடுக்கிட்டார். அடடா கவிதையின் மயக்கத்தில் பெரிய தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி அந்த ஓலைச் சுவடியை கிழித்து போட்டுவிட்டு, ஆற்றுக்கு சென்று எண்ணெய் ஸ்நானம் செய்து வருவதாக சொல்லி எண்ணையுடன் கிளம்பிவிட்டார். பத்மாவதியும் சமையலை கவனிக்க சென்று விட்டார். திடீரென ஆற்றுக்குச் சென்ற கணவர் உடம்பில் எண்ணெய் வழிய வந்து பத்மாவதி நான் எழுதிக் கொண்டிருந்த ஓலை சுவடியை கொண்டுவா, திடீரென ஒரு வரி ஞாபகம் வந்தது எழுதி விட்டு போகிறேன் என்று அந்த ஓலை சுவடியில் எழுதிவிட்டு மீண்டும் சென்று விட்டார்.

ஓலை சுவடியை எடுத்து வைத்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஜெயதேவர் திரும்பி வந்து பூஜைகளை முடித்துவிட்டு அமர காலையில் அவர் அபசாரமாக எழுதியது நினைவுக்கு வர அந்த ஓலையை எடுத்து பார்க்க அவர் கிழித்து போட்ட ஓலையில் அவர் எழுதிய வரிகளே மீண்டும் இருக்க கண்டு தன் மனிவியை அழைத்து "நீ ஏதாவது எழுதினாய என்று கேட்க, அதை மறுத்த பத்மாவதி நீங்க தானே எண்ணெய் ஒடம்போட வந்து எழுதுட்டி போனீங்க என்று சொல்லவும் ஜெயதேவருக்கு ஆச்சர்யம் ஒரு புறம் ஆதங்கம் ஒருபுறம். அவருக்கு புரிந்து விட்டது. இறைவனே வந்து எழுதி இருக்கிறான் என்று. உடனே பத்மாவதியை பார்த்து பத்மாவதி நீ பாக்கியசாலி, இறைவனை காணும் பேறு உனக்கு கிடைத்து விட்டது. கண்ணா எனக்கு நீ ஏன் தரிசனம் தரவில்லை என் மேல் உனக்கு கருணை இல்லியா என்று பலவாறு அரற்றினார்.

பத்மாவதியோ ஆஹா என்ன பாக்கியம் பாக்கியம், என் கணவரின் ரூபத்தில் இறைவன் எனக்கு காட்சி அளித்துள்ளான். என்னே அவனது கடாட்சம் என்று சொல்லி இறைவனை பலவாறு புகழ்ந்து மெய் மறந்து நின்றார். அச்சமயம் ஜெயதேவர் பத்மாவதியின் இரு கைகளையும் தன் கையினால் பற்றி சையது பத்மாவதி ரமண ஜெயதேவகவி என்று பாடினார். இவ்வாறு ஜெயதேவரின் கவிகள் அந்த பிலவ கிராமம் முழுதும் பாடி பரவசமுற்றது.

Sunday, December 19, 2010

ஜெயதேவர் பத்மாவதியின் திருமண வாழ்வு இனிதே நடைபெறுகிறது. அவர்கள் வீடு வீட்டில் விட மேலாக ஒரு தெய்வ சந்நிதி போல் இருந்தது. குணக்குன்றான பத்மாவதியை போல் ஒரு மங்கை நல்லாள் மனைவியாக கிடைத்தால் வீடு தெய்வம் குடியிருக்கும் கோயிலாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும். வீட்டில் பூஜை என்ன பூமாலை என்ன பாமாலை என்ன அடியார்களுக்கு விருந்து உபசாரம் என்ன எல்லாம் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது . கிடைத்த நேரத்தில் இறைவனுக்கு பாமாலை எழுத தவறியதில்லை ஜெயதேவர். ஜெயதேவர் பாடல் எழுது பாட பத்மாவதி அதை ரசித்து களிப்பில் நடனமாடி கணவருக்கு உற்ற துணைவியாகவும் கணவரின் எழுத்துக்களை ஊக்கப்படுத்தியும் வந்தார். விருந்து கொடுப்பதும், பாடுவதும் ஆடுவதுமாகவே இருந்தால் இருக்கும் செல்வம் எவ்வளவு நாளைக்கு தான் வரும். குந்தி (உட்கார்ந்து) தின்னால் குன்றும் குறையும் என்பார்களே அதுபோல் வசந்தமாக வீசி கொண்டிருந்த அந்த இல்லம் வறுமையில் வாடியது. வறியோர்க்கு அழகு வறுமையில் செம்மை என்பது போல் பத்மாவதி அம்மையார் சற்றும் சளைக்காமல் தன் தகுதிக்கேற்ப தன் அன்றாட கர்மாக்களை எப்போதும் போல் செய்து வந்தார். இந்த நேரத்தில் தான் ஜெயதேவரும் தட் அஷ்டபதியை எழுதி கொண்டிருந்தார்.

Thursday, December 16, 2010

கமலா பாயின் வேண்டுதல் ஜகநாத பெருமாளின் செவிக்கு எட்டியது. கருணா மூர்த்தியான இறைவன் தன் பக்தையின் குரல் கேட்டும் வாலாவிருபானா என்ன? அவன் லீலை தான் வார்த்தைகளில் சொல்வதற்கும் எளியதோ? குழந்தைப் பேற்றை வேண்டியது கமலா பாய் . இறைவன் செய்தது என்ன தெரியுமா?
பாருங்களேன்.

நாராயண சாஸ்திரியார் தினப்படி செய்வது போல் ஆராதனங்களை முடித்துக் கொண்டு எப்போதும் போல் நாம சங்கீர்தனமாக நாமாவளிகளை உச்சரித்துக்கொண்டே வந்தவர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். ஸ்ரீமன் நாராயணனும் அவரது கனவில் சங்கு சக்ர கதா பாணியாய் திருமகள் மார்பில் வீற்றிருக்க பூமகள் அருகில் வர மலர்ந்த புன்னகையுடன் கண்ணை கவரும் காந்தியுடன் எழிலுடன் சாச்த்ரியாருக்கு தரிசனம் அளித்தார். பின்னர் மகனே நீயும் உன் துணைவியாரும் செய்த தவத்தின் பலன் உனக்கு கிடைத்துவிட்டது. இனி உன் வாழ்வில் எல்லாம் இன்பமயம். உங்கள் குறையும் உன் மூதாதையர் குறையும் தீரும் நாள் வெகு அருகில் தான். உன் மனைவியின் வேண்டுதல் நிறைவேற யாம் வரமளிக்கிறோம் என்று சொல்லி மறைந்துவிட்டார்.

கனவு முடிந்ததும் கண் விழித்த நாராயண சாஸ்திரியார் கண்ணை கசக்கி கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்து யாரும் இல்லாதது கண்டு திகைத்து நிற்கையில் கமலா பாய் அது குறித்து அவரை விவரம் கேட்க உற்சாகத்துடன் கமலா பாயை பார்த்து, நான் ஒரு அற்புதமான கனவு கண்டேனடி என் கனவில் ஸ்ரீமன் நாராயாணன் ஸ்ரீமகள் பூமகளுன் சங்கு சக்ர கதாபாணியாய் எனக்கு காட்சி கொடுத்து உன் குறை தீரும் உன் முன்னோர் குறை த்ரீரும் உன் மனைவியின் வேண்டுதல் நிறைவேறும் என்று கூறி சென்றான் என்று சொல்லி தனக்கு காட்சி கொடுத்த நாராயணி திருமுக மண்டலத்தை நினவிருக்கு கொண்டு வந்து கண்கள் பனி சோர தன் நிலை மறந்து இருந்த நிலையில் அங்கு கமலா பாய் அதைவிட ஒரு பங்கு மேலாக அப்படியா நாம் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை, பெருமாள் கண் திறந்து விட்டார், என் எண்ணம் ஈடேறியது நம் குலம் விளங்க ஒரு குழந்தை நமக்கு கிடைத்து விடுவான் என்று சொல்லி முடித்த மறு நிமிடம் நாராயண சாஸ்திரியார் நினைவுக்கு வந்து விட்டார்.

உடனே அடியே என்ன செய்து விட்டாய். என் பகவானிடம் உனக்கு வேறு எதுவுமே கேட்க தோணலையா. சுயநலத்திற்காக பிள்ளை வரம் கேட்டாயா . ஐயோ நான் என்ன செய்வேன். இப்படி ஒரு காரியம் செய்துவிட்டாளே. நாராயணா மன்னித்து விடப்பா என்று குமுறி குமுறி அழ தொடங்கினார். அப்போது தான் கமலா பாய்க்கும் தாம் செய்த தவறு புரிந்தது. நாராயணன் சேவையை தவிர வேறு ஏதும் அறியாத தம் கணவரின் குறிக்கோளுக்கு தாம் பங்கம் உண்டாகிவிட்டோம் என்று அவள் அவரிட மன்னிப்பு கேட்க போகட்டும் நடந்தது நடந்து விட்டது எல்லாம் அவன் செயல் என்று மனைவி வருத்தபடுவதை தாங்காது சமாதானம் செய்துவிட்டார். பின்னர் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

பக்த விஜயம்


முதன்மையாக ஜெயதேவரை பற்றி ஆரம்பிப்போம்
கீத கோவிந்தம் என்ற அருமையான காவியத்தை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதில் உள்ள பாடல்கள் எட்டு எட்டு வரிகளை கொண்டதால் அஷ்டபதி என்று வழங்கப்படுகிறது. இக்காவியம் உணர்த்தும் கருத்து உன்னதமான ஒன்று. இதில் கண்ணபிரானை மையமாகக் கொண்டது . ஜீவாத்மா பரமாத்மாவை ஒரு தகுந்த குருவின் மூலமே அடைய இயலும் என்னும் கருத்தினை எடுத்து கூறும் வண்ணம் ராதையை ஜீவாத்மாவாக வைத்து தோழியை ஆசார்யன் அல்லது குருவாக கொண்டு கண்ணனை அதாவது பரமாத்மாவை அடைவதாக ஒரு அழகான கற்பனையுடன் கூடிய இந்த கீத கோவிந்தத்தை இயற்றியவர் ஜெயதேவர் தான். 30 அஷ்டபதி அடங்கியுள்ள காவியமாக இருப்பினும் தற்போது 22 அஷ்டபதிகள் தான் வழக்கில் உள்ளன.

இப்போது ஜெயதேவரை பற்றி பார்ப்போம்

ஜகன்னாத க்ஷேத்ரம். பெயரைக் கேட்டவுடனே புல்லரிக்கும் க்ஷேத்ரம் ஜகநாத க்ஷேத்ரம். இந்த க்ஷேத்ரம் ஒரிசாவில் பூரி என்னும் புண்ணிய தளத்தில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஜகன்னாதர் ஆலயம் பிரசித்திபெற்றது இங்கு இறைவன் ஜகன்னாதன் பலதேவனுடனும் தங்கை சுபத்திரையுடனும் காட்சி தருகிறார். இது புகழ் பெற்ற புண்ணியத்தலம். இந்த இடத்துக்கு அருகே பிலவகம் என்னும் சிற்றூர் இருக்கிறது. திந்துபிலவம் என்றும் இவ்வூரை அழைப்பர். இந்த ஊரில் தான் நாராயண சாஸ்திரியார் என்னும் பெரியார் ஒருவர் எப்போதும் இரவைவனின் திருவடிகளையே த்யானித்து கொண்டிருக்கும் ஆசால சீலர் தனது துணைவியார் கமலபாயுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தைபேறு இல்லாமல் இருந்தது. நாராயண சாஸ்திரியார் அதை பெருதுபடுத்தாமல் இருந்தபோதும், கமலாபாய் அவர்களின் மனம் குழந்தைசெல்வதிர்காக ஏங்கியது . இறைவனை பலவாறு வேண்டினார்.

Monday, December 6, 2010

thuriya thavam

நாம் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். பெறற்கரிய பேறு பெற்று இருக்கிறோம். இறைநிலையே தன்மாற்றம் அடைந்து பஞ்ச பூதங்களாக ஓரறிவு முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை வந்து ஆறறிவு கொண்ட மனிதனாக வந்து இருக்கிறோம். ஆறாவது அறிவு என்பது என்ன? பகுத்தறியும் திறன் தான். இத்திறன் கொண்டு தான் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். ஐயமில்லை. ஆனால் அதையும் தாண்டி உள்ளது என்ன ? வாழ்வின் நோக்கம். வாழ்வின் நோக்கம் என்ன ? எங்கு இருந்து வந்தோமோ அங்கேயே திரும்பி போவது தான். எங்கு இருந்து வந்தோம்? இறைநிலையில் இருந்து தான். நாம் நம் அழகை கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல் இறைவன் தன அழகை தானே ரசிப்பதற்காக இவ்வாறு பலவிதமாக உருவெடுத்து வந்ததாக சொல்வதுண்டு . பொருள் வாங்கி வர கடைக்கு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருவதில்லையா அது போல் தான் இந்த மனித உடலோடு பூமிக்கு வந்தது தற்காலிகமாக தான் மீண்டும் நாம் வந்த இடத்துக்கே சென்றாக வேண்டும். அனைவரும் அப்படி தான் செல்வோம். ஆனால் அதற்கான கால அவகாசம் தான் வித்தியாசப்படும். சரி. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? அழகான வழிமுறைகளை நம் ஆசான் அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் அழகாக வகுத்து கொடுத்துள்ளார் அதன் வழி நடக்க வேண்டியதே.


நாம் பிறக்கும்போதே பெற்றோர்கள் வழியாக அதற்கும் முந்தைய மூதாதையர் வழியாக பதிவுகளோடு தான் பிறந்து இருக்கிறோம். போதாதற்கு நாம் பிறந்த முதற்கொண்டு இன்று வரை எத்தனையோ செயல்கள் புரிந்து அதனையும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம் இப்பதிவுகள் நல்லதோ தீயதோ அதனையும் கழித்தாக வேண்டும், தீய பதிவுகளாக நிறைய வைத்திருந்தால் கழுதை மாதிரி உதைகிறோம், குரங்கு மாதிரி நடந்து கொள்கிறோம், தேள் மாதிரி கொட்டுகிறோம் நாய் மாதிரி குரைக்கிறோம் எல்லா விலங்கின பதிவுகளும் சேர்ந்து தான் வைத்திருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அனைத்து உயிரினங்களின் பதிவுகளும் கொண்டது தான் இந்த மனித பிறவி. இந்த பதிவுகள் அனைத்தும் சேர்ந்து தான் நாம் வந்த நோக்கத்தை மறந்தி புலன் வழி செயல்பட்டு மீண்டும் பதிவுகளை கூடிக் கொண்டே இருக்கிறோம். புலன் மயக்கத்தில் சிக்கிய மனம் கூடவே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய ஆறு குணங்களை வளர்த்து கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக ஐந்து பெரும் பழி செயல்களையும் அதாவது பொய் களவு, சூது, கொலை, கற்பழிப்பு முதலியவைக்கும் வழி வகுக்கிறது.

எனவே அறநெறியைப் பின்பற்றி வாழும்போது, இத்தகைய பழிசெயல்கள் நம்மை அணுகாது.


இதற்க்கு முதலில் நாம் நம் மனதை பழக்க வேண்டும் . அதற்காகவே இந்த தான முறைகள், தற்சோதனை உடல் பயிற்சி ஆகியவைகள் நமக்கு அருள் தந்தை அவர்களால் வழங்கப்பட்டுள்ளது எளிய முறை குண்டலினி யோகமாக. இதில் முதலில் உடலை சீராக வைத்துக்கோலா உடல் பயிற்சியும் உயிரை வலமாக வைத்துக் கொள்ள காய கல்ப பயிற்சியும் மனதை வளபடுத்த த்யானம் தற்சோதனையும்.

த்யானம் செய்வதற்கு தக்க ஆசானால் தீட்சை கொடுக்கபடுகிறது, இது முறையே ஸ்பரிச தீட்சை (கோழி தன முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போல்)சச்சு தீட்சை அல்லது நயன தீட்சை (மீன் தன முட்டைகளை பார்வையாலேயே குஞ்சு பொரிப்பது போல்) கொடுக்க படுகிறது. ஸ்பரிச தீத்சை அகின்னை தீட்சையாகவும், நயன தீட்சை துரிய தீட்சையாகவும் கொடுக்கபடுகிறது. இதில் ஆசிரியர் தன கண்களில் ஆற்றலை வரவழைத்து தன அருட்ப பார்வையால் தீட்சை கொடுப்பார். ஐம்புலனாக விரித்தே பழகிய மனம் ஆகினை தீட்சையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது துரிய தவத்தில் அப்புலனும் மறைந்து மனம் மூல நிலையான உய்ராகவே நிற்கும். உயிர் உயிராக நின்றால் தனது அடக்கத்தில் பிரமம்மாக இரைநிலைஆக அமைதி பெறுவதற்கு துரியத்தில் தயாராகிறது . இந்த தவம் துரிய தவம் என்றும், சஹாஸ்ராதார யோகம் என்றும் அழைக்கப்படும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் அதாவது நமது மூலையிலே ஆயிரக்கணக்கான பணிச் சிற்றறை இயக்க மையங்கள் உள்ளன. ஒவொவொரு எண்ணம் தோன்றுவதற்கும் பல சிற்றறைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் .


மகரிஷி இது குறித்து கவி புனைந்துள்ளார்


உச்சியிலே நீ சென்றால் உடனே காணும்

ஒரு அதிசயம் வலமாம் சுற்று ஆகும்

அச்சமயம் அறிவிற்கோர் வியப்பு காணும்

அவ்விடத்தே நிலைத்திருக்கப் பழகிவிட்டால்

இச்சைஎல்லாம் பிறக்குமிடம் கண்டு கொள்வாய்.

எது வேண்டும் வேண்டாம் என்று இரண்டுங்கண்டு

நச்சுவிளை இச்சைஎல்லாம் அழித்துவிட்டு

நலம் ஈயும் எண்ணமே மீதங் கொள்வாய்


ஆக்கினை தவம் செய்துவிட்டு துரிய நிலை தவத்திற்கு உச்சியில் நினைவை செலுத்தும்போது உயிர் சக்தி மூலையில் உள்ள சிற்றரைகளுக்கெல்லாம் ஊடுருவி போகும். அந்த ஓட்டமானது இனிமையாக இருக்கும். ஒவொருவருக்கு ஒவொரு விதமாக இருக்கும். சாதாரணமாக மூலையில் இருக்கும் சிற்றறைகளில் மிக குறைந்த பகுதியையே நாம் பயன்படுத்துகிறோம். மற்றவை பயன்பாடிற்கு வராது. துரிய தவம் இயற்ற அவை ஒவ்வொன்றாக செயலுக்கு வரும். அப்படி விழிப்பு நிலை ஏற்படும்போது இறைநிலையோடு தொடர்பு கிடைத்து இன்டூஷன் எனும் உள்ளுணர்வு கிடைக்கும்.

துரிய தவம் புரிய புரிய

௧) ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும். நடுமனத்தை வெற்றி கொள்கிறது. நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும். நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும். மனதிருக்கு வேகமும், நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயபடாத நிலையம் கிடைக்கும் என்னத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும். தன்வினையில் இருந்தும் விடுவிக்கபடுவோம். உள்ள களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது .