பாருங்களேன்.
நாராயண சாஸ்திரியார் தினப்படி செய்வது போல் ஆராதனங்களை முடித்துக் கொண்டு எப்போதும் போல் நாம சங்கீர்தனமாக நாமாவளிகளை உச்சரித்துக்கொண்டே வந்தவர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். ஸ்ரீமன் நாராயணனும் அவரது கனவில் சங்கு சக்ர கதா பாணியாய் திருமகள் மார்பில் வீற்றிருக்க பூமகள் அருகில் வர மலர்ந்த புன்னகையுடன் கண்ணை கவரும் காந்தியுடன் எழிலுடன் சாச்த்ரியாருக்கு தரிசனம் அளித்தார். பின்னர் மகனே நீயும் உன் துணைவியாரும் செய்த தவத்தின் பலன் உனக்கு கிடைத்துவிட்டது. இனி உன் வாழ்வில் எல்லாம் இன்பமயம். உங்கள் குறையும் உன் மூதாதையர் குறையும் தீரும் நாள் வெகு அருகில் தான். உன் மனைவியின் வேண்டுதல் நிறைவேற யாம் வரமளிக்கிறோம் என்று சொல்லி மறைந்துவிட்டார்.
கனவு முடிந்ததும் கண் விழித்த நாராயண சாஸ்திரியார் கண்ணை கசக்கி கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்து யாரும் இல்லாதது கண்டு திகைத்து நிற்கையில் கமலா பாய் அது குறித்து அவரை விவரம் கேட்க உற்சாகத்துடன் கமலா பாயை பார்த்து, நான் ஒரு அற்புதமான கனவு கண்டேனடி என் கனவில் ஸ்ரீமன் நாராயாணன் ஸ்ரீமகள் பூமகளுன் சங்கு சக்ர கதாபாணியாய் எனக்கு காட்சி கொடுத்து உன் குறை தீரும் உன் முன்னோர் குறை த்ரீரும் உன் மனைவியின் வேண்டுதல் நிறைவேறும் என்று கூறி சென்றான் என்று சொல்லி தனக்கு காட்சி கொடுத்த நாராயணி திருமுக மண்டலத்தை நினவிருக்கு கொண்டு வந்து கண்கள் பனி சோர தன் நிலை மறந்து இருந்த நிலையில் அங்கு கமலா பாய் அதைவிட ஒரு பங்கு மேலாக அப்படியா நாம் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை, பெருமாள் கண் திறந்து விட்டார், என் எண்ணம் ஈடேறியது நம் குலம் விளங்க ஒரு குழந்தை நமக்கு கிடைத்து விடுவான் என்று சொல்லி முடித்த மறு நிமிடம் நாராயண சாஸ்திரியார் நினைவுக்கு வந்து விட்டார்.
உடனே அடியே என்ன செய்து விட்டாய். என் பகவானிடம் உனக்கு வேறு எதுவுமே கேட்க தோணலையா. சுயநலத்திற்காக பிள்ளை வரம் கேட்டாயா . ஐயோ நான் என்ன செய்வேன். இப்படி ஒரு காரியம் செய்துவிட்டாளே. நாராயணா மன்னித்து விடப்பா என்று குமுறி குமுறி அழ தொடங்கினார். அப்போது தான் கமலா பாய்க்கும் தாம் செய்த தவறு புரிந்தது. நாராயணன் சேவையை தவிர வேறு ஏதும் அறியாத தம் கணவரின் குறிக்கோளுக்கு தாம் பங்கம் உண்டாகிவிட்டோம் என்று அவள் அவரிட மன்னிப்பு கேட்க போகட்டும் நடந்தது நடந்து விட்டது எல்லாம் அவன் செயல் என்று மனைவி வருத்தபடுவதை தாங்காது சமாதானம் செய்துவிட்டார். பின்னர் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
No comments:
Post a Comment