Sunday, December 19, 2010
ஜெயதேவர் பத்மாவதியின் திருமண வாழ்வு இனிதே நடைபெறுகிறது. அவர்கள் வீடு வீட்டில் விட மேலாக ஒரு தெய்வ சந்நிதி போல் இருந்தது. குணக்குன்றான பத்மாவதியை போல் ஒரு மங்கை நல்லாள் மனைவியாக கிடைத்தால் வீடு தெய்வம் குடியிருக்கும் கோயிலாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும். வீட்டில் பூஜை என்ன பூமாலை என்ன பாமாலை என்ன அடியார்களுக்கு விருந்து உபசாரம் என்ன எல்லாம் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது . கிடைத்த நேரத்தில் இறைவனுக்கு பாமாலை எழுத தவறியதில்லை ஜெயதேவர். ஜெயதேவர் பாடல் எழுது பாட பத்மாவதி அதை ரசித்து களிப்பில் நடனமாடி கணவருக்கு உற்ற துணைவியாகவும் கணவரின் எழுத்துக்களை ஊக்கப்படுத்தியும் வந்தார். விருந்து கொடுப்பதும், பாடுவதும் ஆடுவதுமாகவே இருந்தால் இருக்கும் செல்வம் எவ்வளவு நாளைக்கு தான் வரும். குந்தி (உட்கார்ந்து) தின்னால் குன்றும் குறையும் என்பார்களே அதுபோல் வசந்தமாக வீசி கொண்டிருந்த அந்த இல்லம் வறுமையில் வாடியது. வறியோர்க்கு அழகு வறுமையில் செம்மை என்பது போல் பத்மாவதி அம்மையார் சற்றும் சளைக்காமல் தன் தகுதிக்கேற்ப தன் அன்றாட கர்மாக்களை எப்போதும் போல் செய்து வந்தார். இந்த நேரத்தில் தான் ஜெயதேவரும் தட் அஷ்டபதியை எழுதி கொண்டிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment