முதன்மையாக ஜெயதேவரை பற்றி ஆரம்பிப்போம்  
  கீத கோவிந்தம் என்ற அருமையான  காவியத்தை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.  இதில் உள்ள பாடல்கள் எட்டு எட்டு வரிகளை கொண்டதால் அஷ்டபதி என்று வழங்கப்படுகிறது. இக்காவியம் உணர்த்தும் கருத்து உன்னதமான ஒன்று.  இதில் கண்ணபிரானை மையமாகக் கொண்டது .  ஜீவாத்மா பரமாத்மாவை ஒரு தகுந்த குருவின் மூலமே அடைய இயலும் என்னும் கருத்தினை எடுத்து கூறும் வண்ணம் ராதையை ஜீவாத்மாவாக வைத்து தோழியை ஆசார்யன் அல்லது குருவாக கொண்டு கண்ணனை அதாவது பரமாத்மாவை அடைவதாக ஒரு அழகான கற்பனையுடன் கூடிய இந்த கீத கோவிந்தத்தை இயற்றியவர் ஜெயதேவர் தான்.  30 அஷ்டபதி அடங்கியுள்ள காவியமாக இருப்பினும் தற்போது 22 அஷ்டபதிகள் தான் வழக்கில் உள்ளன.  
இப்போது ஜெயதேவரை பற்றி பார்ப்போம் 
ஜகன்னாத க்ஷேத்ரம்.  பெயரைக் கேட்டவுடனே புல்லரிக்கும் க்ஷேத்ரம் ஜகநாத க்ஷேத்ரம்.  இந்த க்ஷேத்ரம் ஒரிசாவில் பூரி என்னும் புண்ணிய தளத்தில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.  இங்கு ஜகன்னாதர் ஆலயம் பிரசித்திபெற்றது  இங்கு இறைவன் ஜகன்னாதன் பலதேவனுடனும் தங்கை சுபத்திரையுடனும் காட்சி தருகிறார்.  இது புகழ் பெற்ற புண்ணியத்தலம்.  இந்த இடத்துக்கு அருகே பிலவகம் என்னும் சிற்றூர் இருக்கிறது.  திந்துபிலவம் என்றும் இவ்வூரை அழைப்பர்.  இந்த ஊரில் தான் நாராயண சாஸ்திரியார் என்னும் பெரியார் ஒருவர் எப்போதும் இரவைவனின் திருவடிகளையே த்யானித்து கொண்டிருக்கும் ஆசால சீலர் தனது துணைவியார் கமலபாயுடன் வாழ்ந்து வந்தார்.   ஆனால் அவர்களுக்கு குழந்தைபேறு இல்லாமல் இருந்தது.  நாராயண சாஸ்திரியார் அதை பெருதுபடுத்தாமல் இருந்தபோதும், கமலாபாய் அவர்களின் மனம் குழந்தைசெல்வதிர்காக ஏங்கியது .  இறைவனை பலவாறு வேண்டினார்.  
 
No comments:
Post a Comment