அவர் திரும்பி வரும்போது வழியில் ஒரு அடர்ந்த காடு வந்தது. அவரது கிராமத்துக்கு இன்னும் சில காத தூரமே இருந்த நேரத்தில் திடீரென்று விசித்திரமான சப்தம் கேட்டது. தேர் குதிரைகளும் தேர் பாகனும் பயந்து விட்டனர். அப்போது அங்கு வந்த கொள்ளை கூட்டத்தார் அங்கு சூழ்ந்து கொள்ள தேர்ப் பாகன் இறங்கி ஓடி விட்டான். ஜெயா தேவரும் பொருளைப் பற்றி கவலை படாமல் அவர்களே எடுத்து செல்லட்டும் என்று இறங்கி நடக்க ஆரம்பித்தார். பொருளை பற்றி கவலை படாத ஞானி அவர் என்பது தீய செயல்களில் ஈடுப்பாடிருக்கும் கள்வர்களுக்கு எங்கே புரிய போகிறது? அவர்கள் ஜெயதேவர் இறங்கி நடந்தவுடன் ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வரத்தான் போகிறார் என்று தப்பிதமாக புரிந்துக் கொண்டு என்ன சொல்லியும் கேட்காமல் அவரது கைகளையும் கால்களையும் வெட்டி ஒரு பாழும் கிணற்றில் அவரை தூக்கி போட்டு விட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.
கை கால்கள் வெட்டப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட கிணற்றில் விழுந்த ஜெயதேவர் வலியினால் துன்பபட்டலும் இறைவன் நாமத்தை உச்சரிக்க மட்டும் மறக்கவில்லை. இறைவனை பாடிக் கொண்டிருந்தார். இரத்தம் அதிகமாக வெளியேற வெளியேற அவரது சக்தி குறைந்து நினைவிழக்கும் நிலையிலும் அவரது உள்ளம் நீல வண்ண கண்ணனை , மச்சாவதார மூர்த்தியை நினைத்து கொண்டு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாகமாக நினைவை இழந்து கொண்டிருந்த அவருக்கு பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த எம்பெருமானின் திருவடி சேவையை கண்டு மனங்குளிர்ந்து கொண்டு இருந்தார். இப்போது முற்றிலும் சமாதி நிலை அடைந்துவிட்டார்.
இது இப்படி இருக்க அங்கு பத்மாவதி காலையில் சென்ற கணவர் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று ஒரு புறம் கவலையாகவும் மறுபுறம் தியானத்தில் அமர்ந்தால் அவருக்கு நேரம் போவதே தெரியாது வந்து விடுவார் என்று சமாதானமுமாக இருந்து கொண்டு இருந்தார். இரவு வந்தது, அடுத்த நாள் பொழுது விடிந்தது, ஆயிட்ட்று நாட்கள் ஒன்றாயிற்று இரண்டாயிற்று ஜெயதேவர் வந்த பாடில்லை. அக்கம்பக்கத்தவர் அவர் ஏதாவது குகையில் தியானம் பண்ணி கொண்டு இருப்பார் வந்து விடுவார் என்று சமாதான படுத்தினார்கள்.
பிறகு என்ன நடந்தது. பொறுத்திருந்து பார்கலாமா அன்பர்களே.
No comments:
Post a Comment