கீத கோவிந்தம் (அஷ்டபதி)  கவிகளை இயற்றும்போதே அந்த கிராம வாசிகள் கவிதையை கற்று  காதலாகி கசிந்து உருகி கண்ணீர் மல்கி பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.  இப்படி இருக்கையில் ஒருநாள் பூஜைகளை முடித்து விட்டு பக்தி பரவசத்தில் தன்ன மறந்து 10 வது  சர்கம்  19 வது  அஷ்டபதியில்  ப்ரியே சாருசீலே என்ற பல்லவியுடன் கூடிய பாடலிலே தம்மையும் அறியாமல் ஹே ராதே, விரகத்தினால் தவிக்கும் என் சிரத்திலே உன் பனிமலர் போன்ற தாமரை தளிர் பதங்களை வை " என்று வேண்டுவதாக  அமைந்துவிட திடுக்கிட்டார்.  அடடா கவிதையின் மயக்கத்தில் பெரிய தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி அந்த ஓலைச் சுவடியை கிழித்து போட்டுவிட்டு, ஆற்றுக்கு சென்று எண்ணெய் ஸ்நானம் செய்து வருவதாக சொல்லி எண்ணையுடன் கிளம்பிவிட்டார்.  பத்மாவதியும் சமையலை கவனிக்க சென்று விட்டார்.  திடீரென ஆற்றுக்குச்  சென்ற கணவர் உடம்பில் எண்ணெய் வழிய வந்து பத்மாவதி நான் எழுதிக் கொண்டிருந்த ஓலை சுவடியை கொண்டுவா, திடீரென ஒரு வரி ஞாபகம் வந்தது எழுதி விட்டு போகிறேன் என்று அந்த ஓலை சுவடியில் எழுதிவிட்டு மீண்டும் சென்று விட்டார். 
ஓலை சுவடியை எடுத்து வைத்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஜெயதேவர் திரும்பி வந்து  பூஜைகளை முடித்துவிட்டு அமர காலையில் அவர் அபசாரமாக எழுதியது நினைவுக்கு வர அந்த ஓலையை எடுத்து பார்க்க அவர் கிழித்து போட்ட ஓலையில் அவர் எழுதிய வரிகளே மீண்டும் இருக்க கண்டு தன் மனிவியை அழைத்து "நீ ஏதாவது எழுதினாய என்று கேட்க, அதை மறுத்த பத்மாவதி நீங்க தானே எண்ணெய் ஒடம்போட வந்து எழுதுட்டி போனீங்க  என்று சொல்லவும் ஜெயதேவருக்கு ஆச்சர்யம் ஒரு புறம் ஆதங்கம் ஒருபுறம்.  அவருக்கு புரிந்து விட்டது.  இறைவனே வந்து எழுதி இருக்கிறான்  என்று. உடனே பத்மாவதியை பார்த்து பத்மாவதி நீ பாக்கியசாலி, இறைவனை காணும் பேறு உனக்கு கிடைத்து விட்டது.  கண்ணா எனக்கு நீ ஏன் தரிசனம் தரவில்லை என் மேல் உனக்கு கருணை இல்லியா என்று பலவாறு அரற்றினார்.  
பத்மாவதியோ ஆஹா  என்ன பாக்கியம் பாக்கியம், என் கணவரின் ரூபத்தில் இறைவன் எனக்கு காட்சி அளித்துள்ளான்.  என்னே அவனது கடாட்சம் என்று சொல்லி இறைவனை பலவாறு புகழ்ந்து மெய் மறந்து நின்றார்.   அச்சமயம் ஜெயதேவர் பத்மாவதியின் இரு கைகளையும் தன் கையினால் பற்றி சையது பத்மாவதி ரமண ஜெயதேவகவி என்று பாடினார்.  இவ்வாறு ஜெயதேவரின் கவிகள் அந்த பிலவ கிராமம் முழுதும் பாடி  பரவசமுற்றது.  
 
No comments:
Post a Comment