உனக்கு நான் அதை தரவா
நீ என்ன தருவாய் எனக்கு
அவல் இருக்க உன் வீட்டில்
கொண்டு வாயேன் தோழி
என் வீடு வுமியையும்
உன் வீட்டு அவலையும்
ஒன்றாக சேர்த்தே
ஊதி ஊதி தின்னலாம்
என்ற காலம் தானே இப்போது
சொந்தமென்ன பந்தமென்ன
சுற்றம் என்ன நட்பு என்ன
எதுவுமே இல்லை
மண்ணிலே பிறந்து
மண்ணிலே வாழ்ந்து
மண்ணாக போவதற்கு
யாருமே தேவையில்லை
நெஞ்சமே ஆன்மாவின்
சொல் கேட்டு நீ நடந்தால்
துயரமே இல்லை எப்போதுமே
எனக்கு அந்த பலத்தை
நீ தருவாய்
துயர் வேண்டாம் என நான் நினைக்கவில்லை
துயர் கண்டு அஞ்சா நெஞ்சமும்
எதிர் கொள்ளும் துணிவும்
நீ அருள்வாய் எல்லோர்க்கும்
அதுவே நான் வேண்டுவது
எல்லாம் வல்ல இறைநிலையே
என் வேண்டல் உனக்கு புரிகிறதா?
No comments:
Post a Comment