சந்தனுவிடம் மகனை ஒப்படைத்தல் 
சில வருடங்களுக்கு  பின் 
அந்தி மயங்கும் நேரத்தில் அழகான மாலைப் பொழுதினில் 
கங்கை நதியின் கரையினிலே  சந்தனு ராஜன் ரசித்து நிற்க 
அங்கே கண்ட காட்சி என்ன இந்திரன் தோற்கும் வகையில் 
அழகே உருவை வாலிபனொருவன் அஸ்திரம் எய்தி 
கங்கையின் பிரவாகத்தை தடுத்து தடுத்து விளையாட 
கங்கையின் அழகையும் வாலிபனின் திறனையும் ரசித்திருந்த 
சந்தனு ராஜனை கண்டுகொண்டாள் மகனுடன் இருந்த கங்கையுமே 
மைந்தனை அவனுக்கு காட்டியே இவனே தேவ விரதன் 
உன்னிடம் பெற்ற இந்த மகன் 
உந்தன் எட்டாவது புத்திரன் 
அஸ்திர சாஸ்திரம் தேர்ந்து விட்டான் 
வேதமும் வேதாந்தமும் ஓதி விட்டான் 
சாஸ்திரம் அனைத்திலும் தேர்ந்து விட்டான் 
வில்லாதி வீரன் போரிலோ சூரன்,
வசிஷ்டர், சுக்ராச்சாரியார் அவனது குருமார்கள்
 பரசுராமருக்கு இணையாவன்
அழைத்து செல் அரசே உன் மகனை 
சென்று வா மகனே சகல  வல்லமையும் பெறுவாய்
என்றே ஆசிர்வதித்து மறைந்தாள் கங்கையவள்  
 
No comments:
Post a Comment