ஒரு அழகிய வனம்  வித விதமான மரங்கள் 
பூக்களும் கனிகளும் காண கண்கொள்ளக் காட்சி
மரக்கிளை ஒன்றில் ஜோடி பறவைகளின் களிஆட்டம்  ( இயற்கை நமது குரு) 
களிப்பில் வந்தன பறவையின் குஞ்சுகள் 
குஞ்சுகள் பசியாற ஜோடியும்  பறந்தன இரைத்தேட 
குஞ்சுகளை கவனத்துடன் இருக்குமாறு கூறிவிட்டு 
வேடன் ஒருவன் விரித்தான் வலையை புறாக்களை பிடிக்கவே 
பெற்றோர் இரைத் தேடச் சென்றதுமே வாலுக் குஞ்சுகள்   
பறக்கவே முயன்று வலையில் தானே சிக்கின 
உணவுடன் வந்த தாய்ப் புறா கண்டது தம் குஞ்சுகளை வலையிலே 
குஞ்சுகளுக்காக வருந்திய புறாவும் தானுமே வீழ்ந்தது  வலையிலே 
அடுத்து வந்த ஆண் புறாவுமே மனைவி மக்கள் வழியே சென்றது 
பாவம் பெற்றோர் புறாக்கள் பாசத்தின் வலையில் வீழவே 
தாங்களும் சிக்குண்டன வலையிலே - அதுபோல் நாமும்*
சம்சாரம் என்ற வலையிலே சிக்கி தவிக்கிறோம் 
சம்சாரம் என்பது தேவையே  தாமரை இல்லை தண்ணீர்  போலே 
 
No comments:
Post a Comment