நான் யார்?
இது என்ன கேள்வி?  நான் ஒரு மனிதன் 
மனிதன் என்றால்?  எதை கூறுகிறாய்?
உயிரா உடலா மனமா  
உடல் தான் மனிதன் என்றால் 
உயிர் போன பிறகு அது சவம் அன்றோ
பின் இந்த உயிர் தான் மனிதனா
உடலற்ற உயிர் ஆவி அன்றோ 
மற்று உடலும் உயிரும் சேர்ந்தது தான் மனிதன் 
ஓ இதுவும் தவறு தான் 
உயிரினங்கள் அனைத்துக்கும் 
உடலும் உண்டு உயிரும் உண்டு 
அவைகளை மனிதன் என்பதில்லையே 
பின் என்ன தான் செய்வது
மனம் தான் மனிதனா 
மனம் அனைவருக்கும் தான் உள்ளது 
அது நல்லதை நினைக்கிறதா அல்ல 
அல்லதை நினைக்கிறதா என்பது
தெரியாத போது அதை மனிதன் 
என்று ஒப்புக் கொள்ள முடியாது
மூன்றும் இருந்தும் மனிதன் அல்ல 
மனம் + இதன்  தான் மனிதன் 
இதமாக இருக்க பழகினால் 
மனிதன் ஆகலாம்  இல்லையேல் 
விலங்கு தான் -  அந்தகோ  - 
பாவம் விலங்குகள் -  அவை 
நம்மை விட மேலானவை 
அவற்றிற்கு ஆறாவது அறிவு இல்லை
என்பது உண்மைதான் 
ஆனால் ஒரு தேர்வு 
ஒரு மனிதனை கண்ணை கட்டியும்
ஒரு பசு மாட்டையும் ஓட்டிச் சென்று 
புதிதாக ஒரு இடத்தில் விட்டு விட்டு 
வந்தால் பசு மாடு மீண்டும் 
புறப்பட்ட இடத்திற்கே வந்து விடும் 
ஆனால் மனிதனால் முடியாது 
ஏனெனில் பசுவிற்கு  லோகாதய
விஷயங்களில் ஈடுபாடு கிடையாது 
ஆனால் மனிதன் அப்படி அல்ல 
இறைவன் தந்த ஆறாம் அறிவால் 
இறைவனை அறிவோம் 
 செய்யும் செயல்கள் 
இறைவனுக்கே அற்பித்து 
எங்கு இருந்து வந்தோமோ 
அங்கேயே போவோம் 
மனிதனாக வாழ்வோம் 
மனித நேயம் வளர்ப்போம் 
இறைவனை அறிவோம் 
இறையோடு ஒன்றுவோம் 
தேடல் தொடரும் .
 
No comments:
Post a Comment