அலைபாயும் மனத்தை அடக்கியே பார்த்தேன் 
அந்தகோ பரிதாபம் என்று ஒரு குரல் கேட்டேன் 
திரும்பி பார்த்தால் ஒருவரும் இல்லையே 
ஆனால் மீண்டும் ஓர் சிரிப்பலை 
புரியத்தான் இல்லையே  - இந்த நையாண்டி 
யார் என்று குழம்பித் தான் போனேன்  ஒரு வினாடி
திடீரென ஒரு மின்னல் பளிச் பளிச் என் மண்டையில் 
நையாண்டி மேளம் செய்தது என் மனமோ என்று 
உடனே கேட்டேன் மனதை _ நீயா என்று 
ஆமாம் அசடே நான் தான் என்றது
ஒரு புறம் அழுகை ஒருபுறம் கோபம்  
என்ன திமிரா நையாண்டி ஏன் என்றேன் 
என் அழுகையில் கரைந்த என் மனம் சொன்னது 
என்னை அடக்க நினைக்காதே நான் அடங்க மாட்டேன் 
என்னை அறிய நினையேன், நீ வேறு நான் வேறு அல்ல 
என்பதை உணர்வாயே என்றது மனமே
முயற்சி செய்கிறேன் மனமே உனை அறிய தினமே
என்று முயற்சியை ஆரம்பித்தேன்.  
ஹாய் என்ன குறட்டை காலை வேளையில் 
என்ற கணவரின் குரல் கேட்டு எழுந்தால்
மீண்டும் கேட்டது மனத்தின் நையாண்டி 
 
No comments:
Post a Comment