மகரிஷி கிருனு தவமது புரிகையில் 
கண்களில் வீரியம் பெருக 
அதை சுவைத்த பாம்பொன்று 
குழந்தை ஒன்றை ஈன்றது 
வேடர்கள் குழந்தையைப் பார்க்க 
எடுத்து வளர்த்தனர் அன்போடு 
பெயரும் இட்டனர் ரிட்சன் என்று
அலாகே உருவான ரிட்சன் 
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் வளர்ந்தான் ரிட்சன் 
 வேடுவ பெண்ணை  மணந்தே 
குழந்தைகளை  ஈன்றான் 
வேடுவர் வளர்த்த குழந்தையன்றோ  
வேடுவ குலத் தொழிலாம் 
விலங்குகளை கொன்றும் வழிப்பறி என்றும்
வாழ்க்கையை நடத்தி வர 
ஒரு நாள் சப்த ரிஷிகள் வர 
அவர்களை வழிப் பறி செய்தான்
வழிப் பறி பாவம் விட்டு விடு 
என ரிஷிகள் சொன்னதை மறுத்து 
தம் சொந்தம் சுற்றம் என் செய்வர் 
என்றே வினவ, ரிஷிகள் கூறினார் 
வேடனே சென்று நீ கேட்டு வா 
உன் சுற்றம் உன் பாவத்தை ஏற்குமோ 
என்றவுடன் வேடனும் ஓடினான் 
சுற்றத்தை கேட்டான் பாவத்தில்  பங்கு கொள்ள 
சுற்றம் மறுக்கவும் உணர்ந்தான் உண்மையை 
தஞ்சமே என்று வீழ்ந்தான் ரிஷிகளின் பாதங்களில் 
திருந்திய வேடனுக்கு ஆவணில் அறிவித்து 
"மரா" என்ற மந்திரத்தை உபதேசித்து  
மரா மரா என்றே ஜபித்து வா என்றனர் ரிஷிகள் 
ஒருமையுடன் ஜெபத்தில் ஆழ்ந்தான் வேடனுமே
காலம் சென்றது, மீண்டும் வந்தனர் 
ரிஷிகள் அங்கே புற்றிலிருந்து 
மீட்டனர் ரிட்சனை  மரா ஜபம் 
ராம சாபமாகி பாபமும் தொலைந்தது 
ஞானி என்றே கூறினார் ரிட்சனை 
வால்மீகி என்றும் பெயரிட்டு  கௌரவிக்க 
சீடரும் பலர் ஏற்பட்டனர் இதுவே 
ரிட்சன் வால்மீகி ஆன கதை.
 
No comments:
Post a Comment