Tuesday, December 28, 2010

வாழ்க்கை தத்துவம் - 1

வாழ்க்கை தத்துவம் - 1

வாழ தெரிய வேணும் கண்ணே வாழ தெரிய வேணும்
தெரிந்து கொள்ள முயலனும் கண்ணே
தெரிந்து கொள்ள முயலனும்
தேவை நமக்கு என்ன வென்றே
இருக்க இடமும் உடுக்க உடையும்
பசிக்கு உணவும் தாகத்துக்கு நீரும்
தானே அவசிய தேவை என்று
தெரிந்து கொள்ள வேணும்

மழையில் இருந்தும் வெயில்லில் இருந்தும்
காத்துக்க வேணும் அதுக்கு
வசிக்க ஒரு வீடு போதும்
பல வீடு எதுக்கு கண்ணே
அது கொள்ளைக்கு சமமாகும் புரிஞ்சிக்கோ

வெப்ப தட்ப மாறுதலுகேற்றபடி
உடை வேணும் கண்ணே உடை வேணும்
தேவைக்கு உடை போதும்
படோடோபதுக்கு எதற்கும் கண்ணே
அதையுமே புரிஞ்சிக்கோ கண்ணே புரிஞ்சிக்கோ

பசிக்கு உணவு வேணும் கண்ணே
அளவுக்கு மீறினா அதுவுமே விஷந்தா கண்ணே
அளவோடு சத்தோடு ஆரோக்கியமான உணவோடு
நீரையும் சாப்பிடு கண்ணே
அளவுக்கு அதிகமானா
உடல் நலத்துக்கு கேடு கண்ணே

புரிஞ்சிக்கோ கண்ணே புரிஞ்சிக்கோ
இதை புரிஞ்சிண்டு நீயும் நடந்துக்கிட்ட
உனக்கு புடிச்சிருந்தா இன்னு நான்
சொல்றேன் கண்ணு அடுத்த நூலிலே
கேட்டுக்கோ கண்ணே கேட்டு நடந்துக்கோ

Monday, December 27, 2010

jayadevar contd.

ஜகநாத க்ஷேத்ரத்துக்கு அடுத்துள்ள சில பகுதிகள் கிரவுஞ்ச மன்னனது சுவாதீனத்தில் இருந்தது. கிரவுஞ்ச மன்னன் சில ஆட்கள் புடை சூழ வேட்டையாட காட்டுக்குச் சென்றான். நீர் வேட்கை எடுக்கவே நீர் நிலையை தேடி வந்தான். இறைவனனின் கருணை தான் என்ன என்று பாருங்களேன். அவனுக்கு நீர் வேட்கை ஏற்பட்டு அங்கு வர அந்த பாழும் கிணறு தென்படதொடு அல்லாமல் ஏதோ ஓசை கேட்கிறதே என்று கிணற்றில் எட்டிப் பார்க்க அங்கு வீசிய ஒளியில் அவன் கண்கள் சற்றே மறைத்தன. பின்னர் கூர்ந்து கவனிக்க ஒரு தபஸ்வி மகா தேஜசுடன் கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டான்.

சிவபக்தனான அரசன் உடனே சிவனை நினைத்து மகாதேவா மகான் யாரோ தவறி விழுந்திருக்கிறார், அவரை ஆண்டு அருள் புரிவாயாப்பா என்று கிணற்று அருகே நெருங்கி தான் இறங்க முயற்சி செய்தான். இதற்கிடையே இரு வீரர்கள் கிணற்றில் விழுந்து கிடந்த ஜெயதேவரை கரை சேர்த்தனர். அப்போது தான் அரசன் கவனித்தான் அவரது கைகளும் கால்களும் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அரண்டு போனான். நல்ல அரசாட்சியிலே இப்படியும் நடைபெற்றதே இதென்ன கொடுமை, இத்தகைய மகானுக்கு இவ்வளவு பெரிய தீங்கை விளைவித்தது யாராய் இருக்கக்கூடும் என்று கதறி அரற்றினான் மன்னன். அப்போதும் ஜெயதேவரின் சமாதி நிலை கலையவில்லை.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த அவர் செவிகளில் மன்னரின் சொற்கள் விழவும் மன்னா கோபம் வேண்டாம், யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. என் ஊழ்வினையும் இறைவன் திருவுள்ளமும் அப்படி இருக்க யார் தான் என்ன செய்ய முடியும்? தவிரவும் இறைவனைபேரருளின் முன்பு இந்த உடலுக்கு ஏற்பட்ட இந்த சிறு துன்பம் என்ன செய்து விட முடியும் என்று கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்த மன்னரை தேற்றினார் ஜெயதேவர்.

உடனே மன்னருக்கு மகா வியப்பு. இவர் யார் என்று தெரியவில்லையே, முற்றும் துறந்த மெய்ஞானி தான் போல இருக்கு. கைகால்களை வெட்டப்பட்ட நிலையிலும் இவ்வளவு சாந்தமா பெரியார்கள் அனைவரும் இப்படித்தான் வாழ்கின்றனர் என்று அவரை பணிந்து நின்றான். பின்னர் மெல்ல பல்லக்கிலே ஏற்றி அழைத்துச் சென்று தன குருவாக ஏற்றுகொண்டான். அரசவை மருத்துவர்கள் அவர்கள் காயங்களுக்கு சிகித்சை அளித்தனர். மன்னனும் இவருக்கு பணிவிடை செய்வதே தன் வாழ்வில் முக்தி என கருதி அவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தான்.

ஜய்தேவரோ, மன்னா , உன் கடமையை நீ செய்ய வேண்டும், உன்னை நம்பி உள்ள குடிமக்களின் நலன் தான் ஒரு கொற்றவனுக்கு அழகு. முதலில் நீ கடமையை செய் பின்னர் ஆத்ம விசாரணை நடத்தலாம் என்று கூறி ராஜ காரியங்களை நடத்த வேண்டி அதற்கான வழிகளையும் போதித்தார். அர்ஜுனன் எவ்வாறு கண்ணனின் கீதா உபதேசத்தில் கட்டுப்பட்டு கடமையைச் செய்ய எழுந்தானோ அது போல் கிரவுஞ்ச மன்னனும் ஜெயதேவரின் நல்லுபதேசத்தை ஏற்று கடமை கவனிக்கச் சென்றான்

Monday, December 20, 2010

ஒருநாள் ஜெயதேவர் காலையில் நீராட சென்றவர் அங்கே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். ஜகன்னதபுரத்தை அடுத்துள்ள கிராமத்தில் வசிப்பவரான பகவன்தாஸ் என்ற வியாபாரி அவரது புகழை கேட்டிருந்ததால் அவரை எப்படியாவது தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாட பூஜை செய்து அவரிடம் உபதேசம் பெற விரும்பினார். அதற்கேற்றாற்போல் நிஷ்டையில் இருந்த ஜெயதேவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார். நிஷ்டை கலையும் வரை காத்திருந்து பின்னர் தம்மோடு வந்து தன் இல்லாததைப் புனிதமாக்கா வேண்டும் என்று வேண்டவே தெய்வப்பணிக்கே தன்னை அர்ப்பிக்க நினைத்த அவர் வியாபாரியின் வேண்டுகோளை ஏற்று அவருடன் சென்று அவருக்கு மந்திர உபதேசம் கொடுத்து ஞான மார்கத்தையும் போதித்தார். பின்னர் ஜெயதேவரின் திருப்பணிக்காக ஆயிரம் வராகனையும் பத்மாவதி தேவிக்கு சில உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து தன் வேலையாட்கள் சிலருடன் தேரில் அவரை வழி அனுப்பி வைத்தார்.

அவர் திரும்பி வரும்போது வழியில் ஒரு அடர்ந்த காடு வந்தது. அவரது கிராமத்துக்கு இன்னும் சில காத தூரமே இருந்த நேரத்தில் திடீரென்று விசித்திரமான சப்தம் கேட்டது. தேர் குதிரைகளும் தேர் பாகனும் பயந்து விட்டனர். அப்போது அங்கு வந்த கொள்ளை கூட்டத்தார் அங்கு சூழ்ந்து கொள்ள தேர்ப் பாகன் இறங்கி ஓடி விட்டான். ஜெயா தேவரும் பொருளைப் பற்றி கவலை படாமல் அவர்களே எடுத்து செல்லட்டும் என்று இறங்கி நடக்க ஆரம்பித்தார். பொருளை பற்றி கவலை படாத ஞானி அவர் என்பது தீய செயல்களில் ஈடுப்பாடிருக்கும் கள்வர்களுக்கு எங்கே புரிய போகிறது? அவர்கள் ஜெயதேவர் இறங்கி நடந்தவுடன் ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வரத்தான் போகிறார் என்று தப்பிதமாக புரிந்துக் கொண்டு என்ன சொல்லியும் கேட்காமல் அவரது கைகளையும் கால்களையும் வெட்டி ஒரு பாழும் கிணற்றில் அவரை தூக்கி போட்டு விட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.

கை கால்கள் வெட்டப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட கிணற்றில் விழுந்த ஜெயதேவர் வலியினால் துன்பபட்டலும் இறைவன் நாமத்தை உச்சரிக்க மட்டும் மறக்கவில்லை. இறைவனை பாடிக் கொண்டிருந்தார். இரத்தம் அதிகமாக வெளியேற வெளியேற அவரது சக்தி குறைந்து நினைவிழக்கும் நிலையிலும் அவரது உள்ளம் நீல வண்ண கண்ணனை , மச்சாவதார மூர்த்தியை நினைத்து கொண்டு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாகமாக நினைவை இழந்து கொண்டிருந்த அவருக்கு பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த எம்பெருமானின் திருவடி சேவையை கண்டு மனங்குளிர்ந்து கொண்டு இருந்தார். இப்போது முற்றிலும் சமாதி நிலை அடைந்துவிட்டார்.

இது இப்படி இருக்க அங்கு பத்மாவதி காலையில் சென்ற கணவர் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று ஒரு புறம் கவலையாகவும் மறுபுறம் தியானத்தில் அமர்ந்தால் அவருக்கு நேரம் போவதே தெரியாது வந்து விடுவார் என்று சமாதானமுமாக இருந்து கொண்டு இருந்தார். இரவு வந்தது, அடுத்த நாள் பொழுது விடிந்தது, ஆயிட்ட்று நாட்கள் ஒன்றாயிற்று இரண்டாயிற்று ஜெயதேவர் வந்த பாடில்லை. அக்கம்பக்கத்தவர் அவர் ஏதாவது குகையில் தியானம் பண்ணி கொண்டு இருப்பார் வந்து விடுவார் என்று சமாதான படுத்தினார்கள்.

பிறகு என்ன நடந்தது. பொறுத்திருந்து பார்கலாமா அன்பர்களே.
கீத கோவிந்தம் (அஷ்டபதி) கவிகளை இயற்றும்போதே அந்த கிராம வாசிகள் கவிதையை கற்று காதலாகி கசிந்து உருகி கண்ணீர் மல்கி பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கையில் ஒருநாள் பூஜைகளை முடித்து விட்டு பக்தி பரவசத்தில் தன்ன மறந்து 10 வது சர்கம் 19 வது அஷ்டபதியில் ப்ரியே சாருசீலே என்ற பல்லவியுடன் கூடிய பாடலிலே தம்மையும் அறியாமல் ஹே ராதே, விரகத்தினால் தவிக்கும் என் சிரத்திலே உன் பனிமலர் போன்ற தாமரை தளிர் பதங்களை வை " என்று வேண்டுவதாக அமைந்துவிட திடுக்கிட்டார். அடடா கவிதையின் மயக்கத்தில் பெரிய தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி அந்த ஓலைச் சுவடியை கிழித்து போட்டுவிட்டு, ஆற்றுக்கு சென்று எண்ணெய் ஸ்நானம் செய்து வருவதாக சொல்லி எண்ணையுடன் கிளம்பிவிட்டார். பத்மாவதியும் சமையலை கவனிக்க சென்று விட்டார். திடீரென ஆற்றுக்குச் சென்ற கணவர் உடம்பில் எண்ணெய் வழிய வந்து பத்மாவதி நான் எழுதிக் கொண்டிருந்த ஓலை சுவடியை கொண்டுவா, திடீரென ஒரு வரி ஞாபகம் வந்தது எழுதி விட்டு போகிறேன் என்று அந்த ஓலை சுவடியில் எழுதிவிட்டு மீண்டும் சென்று விட்டார்.

ஓலை சுவடியை எடுத்து வைத்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஜெயதேவர் திரும்பி வந்து பூஜைகளை முடித்துவிட்டு அமர காலையில் அவர் அபசாரமாக எழுதியது நினைவுக்கு வர அந்த ஓலையை எடுத்து பார்க்க அவர் கிழித்து போட்ட ஓலையில் அவர் எழுதிய வரிகளே மீண்டும் இருக்க கண்டு தன் மனிவியை அழைத்து "நீ ஏதாவது எழுதினாய என்று கேட்க, அதை மறுத்த பத்மாவதி நீங்க தானே எண்ணெய் ஒடம்போட வந்து எழுதுட்டி போனீங்க என்று சொல்லவும் ஜெயதேவருக்கு ஆச்சர்யம் ஒரு புறம் ஆதங்கம் ஒருபுறம். அவருக்கு புரிந்து விட்டது. இறைவனே வந்து எழுதி இருக்கிறான் என்று. உடனே பத்மாவதியை பார்த்து பத்மாவதி நீ பாக்கியசாலி, இறைவனை காணும் பேறு உனக்கு கிடைத்து விட்டது. கண்ணா எனக்கு நீ ஏன் தரிசனம் தரவில்லை என் மேல் உனக்கு கருணை இல்லியா என்று பலவாறு அரற்றினார்.

பத்மாவதியோ ஆஹா என்ன பாக்கியம் பாக்கியம், என் கணவரின் ரூபத்தில் இறைவன் எனக்கு காட்சி அளித்துள்ளான். என்னே அவனது கடாட்சம் என்று சொல்லி இறைவனை பலவாறு புகழ்ந்து மெய் மறந்து நின்றார். அச்சமயம் ஜெயதேவர் பத்மாவதியின் இரு கைகளையும் தன் கையினால் பற்றி சையது பத்மாவதி ரமண ஜெயதேவகவி என்று பாடினார். இவ்வாறு ஜெயதேவரின் கவிகள் அந்த பிலவ கிராமம் முழுதும் பாடி பரவசமுற்றது.

Sunday, December 19, 2010

ஜெயதேவர் பத்மாவதியின் திருமண வாழ்வு இனிதே நடைபெறுகிறது. அவர்கள் வீடு வீட்டில் விட மேலாக ஒரு தெய்வ சந்நிதி போல் இருந்தது. குணக்குன்றான பத்மாவதியை போல் ஒரு மங்கை நல்லாள் மனைவியாக கிடைத்தால் வீடு தெய்வம் குடியிருக்கும் கோயிலாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும். வீட்டில் பூஜை என்ன பூமாலை என்ன பாமாலை என்ன அடியார்களுக்கு விருந்து உபசாரம் என்ன எல்லாம் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது . கிடைத்த நேரத்தில் இறைவனுக்கு பாமாலை எழுத தவறியதில்லை ஜெயதேவர். ஜெயதேவர் பாடல் எழுது பாட பத்மாவதி அதை ரசித்து களிப்பில் நடனமாடி கணவருக்கு உற்ற துணைவியாகவும் கணவரின் எழுத்துக்களை ஊக்கப்படுத்தியும் வந்தார். விருந்து கொடுப்பதும், பாடுவதும் ஆடுவதுமாகவே இருந்தால் இருக்கும் செல்வம் எவ்வளவு நாளைக்கு தான் வரும். குந்தி (உட்கார்ந்து) தின்னால் குன்றும் குறையும் என்பார்களே அதுபோல் வசந்தமாக வீசி கொண்டிருந்த அந்த இல்லம் வறுமையில் வாடியது. வறியோர்க்கு அழகு வறுமையில் செம்மை என்பது போல் பத்மாவதி அம்மையார் சற்றும் சளைக்காமல் தன் தகுதிக்கேற்ப தன் அன்றாட கர்மாக்களை எப்போதும் போல் செய்து வந்தார். இந்த நேரத்தில் தான் ஜெயதேவரும் தட் அஷ்டபதியை எழுதி கொண்டிருந்தார்.

Thursday, December 16, 2010

கமலா பாயின் வேண்டுதல் ஜகநாத பெருமாளின் செவிக்கு எட்டியது. கருணா மூர்த்தியான இறைவன் தன் பக்தையின் குரல் கேட்டும் வாலாவிருபானா என்ன? அவன் லீலை தான் வார்த்தைகளில் சொல்வதற்கும் எளியதோ? குழந்தைப் பேற்றை வேண்டியது கமலா பாய் . இறைவன் செய்தது என்ன தெரியுமா?
பாருங்களேன்.

நாராயண சாஸ்திரியார் தினப்படி செய்வது போல் ஆராதனங்களை முடித்துக் கொண்டு எப்போதும் போல் நாம சங்கீர்தனமாக நாமாவளிகளை உச்சரித்துக்கொண்டே வந்தவர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். ஸ்ரீமன் நாராயணனும் அவரது கனவில் சங்கு சக்ர கதா பாணியாய் திருமகள் மார்பில் வீற்றிருக்க பூமகள் அருகில் வர மலர்ந்த புன்னகையுடன் கண்ணை கவரும் காந்தியுடன் எழிலுடன் சாச்த்ரியாருக்கு தரிசனம் அளித்தார். பின்னர் மகனே நீயும் உன் துணைவியாரும் செய்த தவத்தின் பலன் உனக்கு கிடைத்துவிட்டது. இனி உன் வாழ்வில் எல்லாம் இன்பமயம். உங்கள் குறையும் உன் மூதாதையர் குறையும் தீரும் நாள் வெகு அருகில் தான். உன் மனைவியின் வேண்டுதல் நிறைவேற யாம் வரமளிக்கிறோம் என்று சொல்லி மறைந்துவிட்டார்.

கனவு முடிந்ததும் கண் விழித்த நாராயண சாஸ்திரியார் கண்ணை கசக்கி கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்து யாரும் இல்லாதது கண்டு திகைத்து நிற்கையில் கமலா பாய் அது குறித்து அவரை விவரம் கேட்க உற்சாகத்துடன் கமலா பாயை பார்த்து, நான் ஒரு அற்புதமான கனவு கண்டேனடி என் கனவில் ஸ்ரீமன் நாராயாணன் ஸ்ரீமகள் பூமகளுன் சங்கு சக்ர கதாபாணியாய் எனக்கு காட்சி கொடுத்து உன் குறை தீரும் உன் முன்னோர் குறை த்ரீரும் உன் மனைவியின் வேண்டுதல் நிறைவேறும் என்று கூறி சென்றான் என்று சொல்லி தனக்கு காட்சி கொடுத்த நாராயணி திருமுக மண்டலத்தை நினவிருக்கு கொண்டு வந்து கண்கள் பனி சோர தன் நிலை மறந்து இருந்த நிலையில் அங்கு கமலா பாய் அதைவிட ஒரு பங்கு மேலாக அப்படியா நாம் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை, பெருமாள் கண் திறந்து விட்டார், என் எண்ணம் ஈடேறியது நம் குலம் விளங்க ஒரு குழந்தை நமக்கு கிடைத்து விடுவான் என்று சொல்லி முடித்த மறு நிமிடம் நாராயண சாஸ்திரியார் நினைவுக்கு வந்து விட்டார்.

உடனே அடியே என்ன செய்து விட்டாய். என் பகவானிடம் உனக்கு வேறு எதுவுமே கேட்க தோணலையா. சுயநலத்திற்காக பிள்ளை வரம் கேட்டாயா . ஐயோ நான் என்ன செய்வேன். இப்படி ஒரு காரியம் செய்துவிட்டாளே. நாராயணா மன்னித்து விடப்பா என்று குமுறி குமுறி அழ தொடங்கினார். அப்போது தான் கமலா பாய்க்கும் தாம் செய்த தவறு புரிந்தது. நாராயணன் சேவையை தவிர வேறு ஏதும் அறியாத தம் கணவரின் குறிக்கோளுக்கு தாம் பங்கம் உண்டாகிவிட்டோம் என்று அவள் அவரிட மன்னிப்பு கேட்க போகட்டும் நடந்தது நடந்து விட்டது எல்லாம் அவன் செயல் என்று மனைவி வருத்தபடுவதை தாங்காது சமாதானம் செய்துவிட்டார். பின்னர் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

பக்த விஜயம்


முதன்மையாக ஜெயதேவரை பற்றி ஆரம்பிப்போம்
கீத கோவிந்தம் என்ற அருமையான காவியத்தை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதில் உள்ள பாடல்கள் எட்டு எட்டு வரிகளை கொண்டதால் அஷ்டபதி என்று வழங்கப்படுகிறது. இக்காவியம் உணர்த்தும் கருத்து உன்னதமான ஒன்று. இதில் கண்ணபிரானை மையமாகக் கொண்டது . ஜீவாத்மா பரமாத்மாவை ஒரு தகுந்த குருவின் மூலமே அடைய இயலும் என்னும் கருத்தினை எடுத்து கூறும் வண்ணம் ராதையை ஜீவாத்மாவாக வைத்து தோழியை ஆசார்யன் அல்லது குருவாக கொண்டு கண்ணனை அதாவது பரமாத்மாவை அடைவதாக ஒரு அழகான கற்பனையுடன் கூடிய இந்த கீத கோவிந்தத்தை இயற்றியவர் ஜெயதேவர் தான். 30 அஷ்டபதி அடங்கியுள்ள காவியமாக இருப்பினும் தற்போது 22 அஷ்டபதிகள் தான் வழக்கில் உள்ளன.

இப்போது ஜெயதேவரை பற்றி பார்ப்போம்

ஜகன்னாத க்ஷேத்ரம். பெயரைக் கேட்டவுடனே புல்லரிக்கும் க்ஷேத்ரம் ஜகநாத க்ஷேத்ரம். இந்த க்ஷேத்ரம் ஒரிசாவில் பூரி என்னும் புண்ணிய தளத்தில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஜகன்னாதர் ஆலயம் பிரசித்திபெற்றது இங்கு இறைவன் ஜகன்னாதன் பலதேவனுடனும் தங்கை சுபத்திரையுடனும் காட்சி தருகிறார். இது புகழ் பெற்ற புண்ணியத்தலம். இந்த இடத்துக்கு அருகே பிலவகம் என்னும் சிற்றூர் இருக்கிறது. திந்துபிலவம் என்றும் இவ்வூரை அழைப்பர். இந்த ஊரில் தான் நாராயண சாஸ்திரியார் என்னும் பெரியார் ஒருவர் எப்போதும் இரவைவனின் திருவடிகளையே த்யானித்து கொண்டிருக்கும் ஆசால சீலர் தனது துணைவியார் கமலபாயுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தைபேறு இல்லாமல் இருந்தது. நாராயண சாஸ்திரியார் அதை பெருதுபடுத்தாமல் இருந்தபோதும், கமலாபாய் அவர்களின் மனம் குழந்தைசெல்வதிர்காக ஏங்கியது . இறைவனை பலவாறு வேண்டினார்.

Monday, December 6, 2010

thuriya thavam

நாம் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். பெறற்கரிய பேறு பெற்று இருக்கிறோம். இறைநிலையே தன்மாற்றம் அடைந்து பஞ்ச பூதங்களாக ஓரறிவு முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை வந்து ஆறறிவு கொண்ட மனிதனாக வந்து இருக்கிறோம். ஆறாவது அறிவு என்பது என்ன? பகுத்தறியும் திறன் தான். இத்திறன் கொண்டு தான் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். ஐயமில்லை. ஆனால் அதையும் தாண்டி உள்ளது என்ன ? வாழ்வின் நோக்கம். வாழ்வின் நோக்கம் என்ன ? எங்கு இருந்து வந்தோமோ அங்கேயே திரும்பி போவது தான். எங்கு இருந்து வந்தோம்? இறைநிலையில் இருந்து தான். நாம் நம் அழகை கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல் இறைவன் தன அழகை தானே ரசிப்பதற்காக இவ்வாறு பலவிதமாக உருவெடுத்து வந்ததாக சொல்வதுண்டு . பொருள் வாங்கி வர கடைக்கு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருவதில்லையா அது போல் தான் இந்த மனித உடலோடு பூமிக்கு வந்தது தற்காலிகமாக தான் மீண்டும் நாம் வந்த இடத்துக்கே சென்றாக வேண்டும். அனைவரும் அப்படி தான் செல்வோம். ஆனால் அதற்கான கால அவகாசம் தான் வித்தியாசப்படும். சரி. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? அழகான வழிமுறைகளை நம் ஆசான் அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் அழகாக வகுத்து கொடுத்துள்ளார் அதன் வழி நடக்க வேண்டியதே.


நாம் பிறக்கும்போதே பெற்றோர்கள் வழியாக அதற்கும் முந்தைய மூதாதையர் வழியாக பதிவுகளோடு தான் பிறந்து இருக்கிறோம். போதாதற்கு நாம் பிறந்த முதற்கொண்டு இன்று வரை எத்தனையோ செயல்கள் புரிந்து அதனையும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம் இப்பதிவுகள் நல்லதோ தீயதோ அதனையும் கழித்தாக வேண்டும், தீய பதிவுகளாக நிறைய வைத்திருந்தால் கழுதை மாதிரி உதைகிறோம், குரங்கு மாதிரி நடந்து கொள்கிறோம், தேள் மாதிரி கொட்டுகிறோம் நாய் மாதிரி குரைக்கிறோம் எல்லா விலங்கின பதிவுகளும் சேர்ந்து தான் வைத்திருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அனைத்து உயிரினங்களின் பதிவுகளும் கொண்டது தான் இந்த மனித பிறவி. இந்த பதிவுகள் அனைத்தும் சேர்ந்து தான் நாம் வந்த நோக்கத்தை மறந்தி புலன் வழி செயல்பட்டு மீண்டும் பதிவுகளை கூடிக் கொண்டே இருக்கிறோம். புலன் மயக்கத்தில் சிக்கிய மனம் கூடவே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய ஆறு குணங்களை வளர்த்து கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக ஐந்து பெரும் பழி செயல்களையும் அதாவது பொய் களவு, சூது, கொலை, கற்பழிப்பு முதலியவைக்கும் வழி வகுக்கிறது.

எனவே அறநெறியைப் பின்பற்றி வாழும்போது, இத்தகைய பழிசெயல்கள் நம்மை அணுகாது.


இதற்க்கு முதலில் நாம் நம் மனதை பழக்க வேண்டும் . அதற்காகவே இந்த தான முறைகள், தற்சோதனை உடல் பயிற்சி ஆகியவைகள் நமக்கு அருள் தந்தை அவர்களால் வழங்கப்பட்டுள்ளது எளிய முறை குண்டலினி யோகமாக. இதில் முதலில் உடலை சீராக வைத்துக்கோலா உடல் பயிற்சியும் உயிரை வலமாக வைத்துக் கொள்ள காய கல்ப பயிற்சியும் மனதை வளபடுத்த த்யானம் தற்சோதனையும்.

த்யானம் செய்வதற்கு தக்க ஆசானால் தீட்சை கொடுக்கபடுகிறது, இது முறையே ஸ்பரிச தீட்சை (கோழி தன முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போல்)சச்சு தீட்சை அல்லது நயன தீட்சை (மீன் தன முட்டைகளை பார்வையாலேயே குஞ்சு பொரிப்பது போல்) கொடுக்க படுகிறது. ஸ்பரிச தீத்சை அகின்னை தீட்சையாகவும், நயன தீட்சை துரிய தீட்சையாகவும் கொடுக்கபடுகிறது. இதில் ஆசிரியர் தன கண்களில் ஆற்றலை வரவழைத்து தன அருட்ப பார்வையால் தீட்சை கொடுப்பார். ஐம்புலனாக விரித்தே பழகிய மனம் ஆகினை தீட்சையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது துரிய தவத்தில் அப்புலனும் மறைந்து மனம் மூல நிலையான உய்ராகவே நிற்கும். உயிர் உயிராக நின்றால் தனது அடக்கத்தில் பிரமம்மாக இரைநிலைஆக அமைதி பெறுவதற்கு துரியத்தில் தயாராகிறது . இந்த தவம் துரிய தவம் என்றும், சஹாஸ்ராதார யோகம் என்றும் அழைக்கப்படும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் அதாவது நமது மூலையிலே ஆயிரக்கணக்கான பணிச் சிற்றறை இயக்க மையங்கள் உள்ளன. ஒவொவொரு எண்ணம் தோன்றுவதற்கும் பல சிற்றறைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் .


மகரிஷி இது குறித்து கவி புனைந்துள்ளார்


உச்சியிலே நீ சென்றால் உடனே காணும்

ஒரு அதிசயம் வலமாம் சுற்று ஆகும்

அச்சமயம் அறிவிற்கோர் வியப்பு காணும்

அவ்விடத்தே நிலைத்திருக்கப் பழகிவிட்டால்

இச்சைஎல்லாம் பிறக்குமிடம் கண்டு கொள்வாய்.

எது வேண்டும் வேண்டாம் என்று இரண்டுங்கண்டு

நச்சுவிளை இச்சைஎல்லாம் அழித்துவிட்டு

நலம் ஈயும் எண்ணமே மீதங் கொள்வாய்


ஆக்கினை தவம் செய்துவிட்டு துரிய நிலை தவத்திற்கு உச்சியில் நினைவை செலுத்தும்போது உயிர் சக்தி மூலையில் உள்ள சிற்றரைகளுக்கெல்லாம் ஊடுருவி போகும். அந்த ஓட்டமானது இனிமையாக இருக்கும். ஒவொருவருக்கு ஒவொரு விதமாக இருக்கும். சாதாரணமாக மூலையில் இருக்கும் சிற்றறைகளில் மிக குறைந்த பகுதியையே நாம் பயன்படுத்துகிறோம். மற்றவை பயன்பாடிற்கு வராது. துரிய தவம் இயற்ற அவை ஒவ்வொன்றாக செயலுக்கு வரும். அப்படி விழிப்பு நிலை ஏற்படும்போது இறைநிலையோடு தொடர்பு கிடைத்து இன்டூஷன் எனும் உள்ளுணர்வு கிடைக்கும்.

துரிய தவம் புரிய புரிய

௧) ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும். நடுமனத்தை வெற்றி கொள்கிறது. நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும். நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும். மனதிருக்கு வேகமும், நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயபடாத நிலையம் கிடைக்கும் என்னத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும். தன்வினையில் இருந்தும் விடுவிக்கபடுவோம். உள்ள களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது .

Tuesday, November 30, 2010

புரிகிறதா உனக்கு

என் வீட்டில் உமி இருக்கு
உனக்கு நான் அதை தரவா
நீ என்ன தருவாய் எனக்கு
அவல் இருக்க உன் வீட்டில்
கொண்டு வாயேன் தோழி
என் வீடு வுமியையும்
உன் வீட்டு அவலையும்
ஒன்றாக சேர்த்தே
ஊதி ஊதி தின்னலாம்
என்ற காலம் தானே இப்போது
சொந்தமென்ன பந்தமென்ன
சுற்றம் என்ன நட்பு என்ன
எதுவுமே இல்லை
மண்ணிலே பிறந்து
மண்ணிலே வாழ்ந்து
மண்ணாக போவதற்கு
யாருமே தேவையில்லை
நெஞ்சமே ஆன்மாவின்
சொல் கேட்டு நீ நடந்தால்
துயரமே இல்லை எப்போதுமே
எனக்கு அந்த பலத்தை
நீ தருவாய்
துயர் வேண்டாம் என நான் நினைக்கவில்லை
துயர் கண்டு அஞ்சா நெஞ்சமும்
எதிர் கொள்ளும் துணிவும்
நீ அருள்வாய் எல்லோர்க்கும்
அதுவே நான் வேண்டுவது
எல்லாம் வல்ல இறைநிலையே
என் வேண்டல் உனக்கு புரிகிறதா?

Sunday, November 14, 2010

கவலை ஏனோ?

கவலை ஏனோ?

கவலை எனக்கு இல்லை என்று சொல்வாருண்டோ
கவலை இல்லை என்று கவலை படும் ஜன்மமும் உண்டு இங்கே
கவலை படுவதால் அது தீரும் என்பது உண்டோ
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வீணே மனதை கெடுக்கும்
கவலை வீணே உடலை கெடுக்கும்
அதுவே நம்மின் உயிர்க் குடிக்கும்
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வேண்டாம் நண்பர்களே
நடந்தது நல்லேதே
நடப்பது நல்லதே
நடக்கும் நல்லதே
என்றே இருப்போம்
இன்றோடு அதனை
வழி அனுப்புவோம்

சின்ன சின்ன அணில் குட்டி

சின்ன சின்ன அணில் குட்டி
சிங்கார அணில் குட்டி
ராமர் வைத்தக் கோடுடன்
வாலை வாலை ஆட்டியே
அழகாக மரத்தில் ஏறி
அற்புதமாய் காய்த்திருந்த
கொய்யாக் காயை
கொறித்து கொறித்துத் தின்றது
ஒயிலாக நின்று அதை
கண்ணாரக் கண்டு நான்
என்னையே மறந்தேனே
அழகான் அந்த காட்சிக் கண்டு
அதன் பட்டு மேனித் தொட்டுப் பார்க்க
அளவில்லாத ஆசையே
ஆயினும் என் செய்வேன்
அது ஓடியே விட்டது
என்னை அது கண்டதும்

Wednesday, November 10, 2010

பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட்6

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்

மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .


பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட் 5

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்


மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .














Tuesday, November 9, 2010

பீஷ்மர் Part IV

தேவ விரதன் பீஷ்மர் ஆன கதை

மலருக்கு மலர் தாவும் வண்டென மன்னன் சந்தனுவும்
பெண்ணுக்கு பெண் தாவும் குணம் கொண்டவனோ
கங்கை பிரிந்ததும் மங்கை தந்த மகன் தனை
கண்ணும் கருத்துமாய் கொண்டாடி மறந்தனன் பெண்தனை
இருந்தும் விதி செய்த மாயமோ யமுனை அவன் வந்த காரணம்
கரையினிலே அவன் கண்ட பதுமையவளிடம் கொண்ட காதல்
காதலை அவளிடம் கனிவுடன் கூறி மங்கை நல்லாளின் ஒப்புதல்
வேண்ட மீனவ பெண் அவள் செம்படவ தலைவன் தன் தகப்பனை
காணச் சொல்ல அவள் அழகிலே மயங்கிய மன்னனும் உடனே
அத்தலைவனைக் கண்டு தன் விழைவினை கூற அவனுமே ஒரு
நிபந்தனை விதித்தான் யுவராஜா பட்டம் தன் மகளின் மகனுக்கு
கிடைக்குமெனில் அவன் விருப்பம் நிறைவேற்ற தனக்கேதும்
தடை இல்லையென்று, எட்டாக் கனியென நினைத்தே வழி நடந்தான்
நடைபிணம் போல் உலா வரும் தன்னருமை தந்தையின் நிலைக்
கண்டு குலைந்த மகன் ஏன் என்று கேட்க தான் கண்ட நிலவினையும்
கொண்ட காதலையும் அது எட்டாக் கனியான கதையும் சொல்ல
தந்தைக்கு வந்த துன்பம் தனக்கென வந்தது போல் நினைத்து
செம்படவத் தலைவனைச் சந்தித்து அவர் மகள் பால் தன் தந்தை
கொண்ட மையலை விவரித்து பெண் கேட்க, தன் இச்சைதனை
வெளியிட்ட தலைவனுக்கு தான் இன்றே யுவராஜா பட்டத்தை விட்டேன்
என் சொல்லியும், பேராசைக் கொண்ட தலைவனுமே மறுத்து
உன் பேரில் உள்ள நம்பிக்கை உன் வாரிசு பேரில் எனக்கு எப்படி வரும்
என்று வினவிய தலைவனை பார்த்து போட்டானே ஒரு சபதம்
திருமணம் எனக்கு இல்லை , ஆயுள் உள்ளவரை பிரம்மச்சாரி என்று
தேவவிரதனின் இத்தகு அற்புத செயலை கண்டு களித்த
தேவர்கள் பூமாரி பொழிந்து , முனிவர்களும் ஞானிகளும்
பீஷ்மர் வாழ்க பீஷ்மர் வாழ்க என வாழ்த்திய வாழ்த்தொலி
உலகமே அதிர தேவவிரதன் பீஷ்மர் ஆனார்.

தொடரும்
__________________

பிதாமகர் பீஷ்மர் பார்ட் 5


சுயம்வரத்தில் பங்கு பெறுதல்
விண்ணும் மண்ணும் போற்றிய தேவவிரதன்
பீஷ்மர் என்றே ஆயினன் - மீனவ தலைவனும்
மகிழ்ந்தே நீரே வீரர் நீரே இவளின் தகப்பன்
நீரே இவளை உடன் அழைத்துச் சென்று
உம் தந்தையிடம் ஒப்படைபீர் என்றே
தன் அழகிய அன்பு மகளாம் சத்தியவதியை
பீஷ்மனுடனே அனுப்பினான்

தந்தைக்காக தன் வாழ்வையே தியாகம் செய்த
உத்தம புத்திரன் பீஷ்மன் சத்தியவதியுடன் வந்தே
தந்தையிடம் சேர்ப்பித்தான் அவளையே - மகிழ்ந்த
தந்தையும் சத்தியவதியை மணந்தே வாழ்ந்தனன்
நல் வாழ்க்கையை இனிமையுடன்

இல்லறமாம் நல்லறத்தில் இனிதே பெற்றனர்
மக்கள் இருவரை சித்திராங்கதன் முதல்வனும்
விசித்திரவீரியன் இரண்டாமவுனுமாகவே
இருவரும் நன்கே வளர்ந்தனர்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

சந்தனுவைத் தொடர்ந்து சித்திராங்கதன் ஆள
சித்திராங்கனும் கந்தர்வன் ஒருவனிடம் போர் புரிந்து மாள
அவன் சந்ததி அற்ற காரணத்தால்
இளவல் விசித்திர வீரியன் பட்டம் ஏற்க
பாலகன் என்ற காரணத்தால் தக்க வயது வரும் வரை
பீஷ்மரும் பரிபாலனம் செய்து வந்தார் ராஜ்யத்தை

இளவல் விசித்திரவீரியனும் பருவ வயதை எட்டினான்
திருமணம் செய்விக்க கருதியே காசி ராஜ்ஜியம் சென்றார்
காசி ராஜனின் மகள்களுக்கு சுயம்வரம் என்றே செய்திக் கேட்டு
பல தேசத்து ராஜகுமாரர்கள் அவையில் இருந்தனர்
தங்கள் பெயரினை சுயம்வரத்திற்கு கொடுத்து
பீஷ்மரும் தன் பெயரை கொடுக்க திகைத்தனர் அனைவரும்

முதுமை அடைந்தவரும் திருமணம் புரியமாட்டேன் என்றே
சபதம் ஏற்றவரும் இவர் ஏன் இங்கு வந்தார் இவருக்கேன்
திருமணம் என்றும் அனைவரும் இகழ்ந்தனர் பீஷ்மரை
பாவம், அவர்கள் அறியார், சொன்ன சொல் காக்கும் நம்
உத்தம வீரர் தன் தம்பியின் நிமித்தம் வந்தார் என்பதை

கன்னிகை மூவரும் கிழவர் என்றே பீஷ்மரை ஒதுக்க
கோபம் கொண்ட பீஷ்மரும் அனைவரையும் யுத்தத்துக்கு அழைத்து
அனைவரும் புறமுதுகிட்டு ஓட வீரன் சால்வன் மட்டும் விடாது தன்
திறமையை முடிந்த மட்டும் காட்டி இறுதியில் தோல்வியைத் தழுவ
கன்னிகைகள் மூவரையும் தேரில் ஏற்றி அஸ்தினாபுரம் அடைந்தார்


Saturday, October 30, 2010

மலரினும் மெலிதோ அவள் மனம்

மலரினும் மெல்லியல் அவளே
மெழுகென உருகிடும் மனமே
என்னரும் தோழியும் அவளே
சொல்லவா அவளின் குணத்தை

வாடிய செடிக்கு நீர் பாய்ச்சியே
செடியின் நகைப்பை பாரென சொல்வாள்
வாழையின் இலையை கிள்ள
வாழை அழுகிறதே என்பாள்

ஒரு நாள் இரவு மின்சாரம் தட்டு
பறவையின் வடிவில் மெழுகு
அதை ஏற்றியே வைத்தேன் அங்கு
சற்றே நேரம் போனது

மெழுகும் உருக ஆரம்பிக்க
மெழுகாய் உருகினாள் என் தோழி
கண்கள் இரண்டிலும் கண்ணீர் வழிய
காரணம் கேட்டேன் என்னவென்றே
பறவை சாகக் கிடக்கிறேதே என்றாள்

இதுபோல் எத்தனை எத்தனை
அனுபவம் அவளிடம்
என்னவென்றே சொல்வேன்
மலரினும் மெலிதோ அவள் மனம்





Friday, October 29, 2010

பிதாமகர் பீஷ்மர் பார்ட் 3


சந்தனுவிடம் மகனை ஒப்படைத்தல்
சில வருடங்களுக்கு பின்

அந்தி மயங்கும் நேரத்தில் அழகான மாலைப் பொழுதினில்
கங்கை நதியின் கரையினிலே சந்தனு ராஜன் ரசித்து நிற்க
அங்கே கண்ட காட்சி என்ன இந்திரன் தோற்கும் வகையில்
அழகே உருவை வாலிபனொருவன் அஸ்திரம் எய்தி

கங்கையின் பிரவாகத்தை தடுத்து தடுத்து விளையாட
கங்கையின் அழகையும் வாலிபனின் திறனையும் ரசித்திருந்த
சந்தனு ராஜனை கண்டுகொண்டாள் மகனுடன் இருந்த கங்கையுமே
மைந்தனை அவனுக்கு காட்டியே இவனே தேவ விரதன்

உன்னிடம் பெற்ற இந்த மகன்
உந்தன் எட்டாவது புத்திரன்
அஸ்திர சாஸ்திரம் தேர்ந்து விட்டான்
வேதமும் வேதாந்தமும் ஓதி விட்டான்
சாஸ்திரம் அனைத்திலும் தேர்ந்து விட்டான்
வில்லாதி வீரன் போரிலோ சூரன்,
வசிஷ்டர், சுக்ராச்சாரியார் அவனது குருமார்கள்
பரசுராமருக்கு இணையாவன்
அழைத்து செல் அரசே உன் மகனை
சென்று வா மகனே சகல வல்லமையும் பெறுவாய்
என்றே ஆசிர்வதித்து மறைந்தாள் கங்கையவள்



பிதாமகர் பீஷ்மர் பார்ட் 2

சந்தனுவை கங்கை கணவனாக தேர்ந்தெடுத்தல்
சந்தனு வாக்கை தவறியதால் கங்கையும் மகனுடன் சென்று விட்டாள்
செல்லும்போதே சந்தனுவிடம் தன்னை யாரென என்றே அறிவித்தாள்
சொன்னாள் முன்னாள் நிகழ்வை சந்தனு ராஜா கேட்பதற்கே
ரிஷிகளும் முனிவரும் போற்றும் கங்கை நதியின் தேவதை நானே

அழகிய பசுமையும் குன்றுகளும் கொண்ட மலைசாரல்
அங்கே வசிஷ்ட மகரிஷியின் ஆசிரம வாசம்
அஷ்ட வசுக்களும் அங்கே தம் தம் பத்தினியருடன்
ஓடி ஆடி விளையாட அங்கே கண்டனர் கண்ணுக்கு இனிய காட்சி

வசிஷ்டரின் வளர்ப்பாம் நந்தினி பசு
திவ்ய மங்கள ரூபமான அழகிய பசு
தன் கன்றுடன் மேய்வதை கண்டே
மையல் கொண்டே அப்பசுவினைக் கேட்டே
அடம் பிடித்தாள் ஒரு வசுவின் பத்தினியே

ரிஷியின் பசுவது வேண்டாம் நமக்கு தேவர்கள் நமக்கு பசு எதற்கு
ரிஷியின் சாபம் வேண்டாம் நமக்கு சொல்வதை கேட்பாய் சதியே நீயும்
எத்தனை சொல்லியும் கேளா சதியே பதியை கெஞ்ச கொஞ்சி
பூமியில் உள்ள தோழிக்கே பரிசாய் அளிக்க தேவை இப்பசுவே

உடனே தாருங்கள் மறுமொழி வேண்டாம் என்று கூறவே
மதியின் மயக்கம் முனிவரின் சாபம் மறக்க
வசுக்களும் திருடியே சென்றனர் பசுவுடன் கன்றையும்
வசிஷ்டரும் திரும்பினார் தன் குடிலுக்கே

பசுவும் கன்றும் காணாது திகைத்தார் சற்றே
அறிந்தார் நடந்ததை , கொண்டார் சீற்றமும்
சபித்தார் வசுக்களை மானுடராக பிறக்கவே
சாபம் அறிந்த வசுக்களுமே வந்தானர் விரைவாய்

வசிஷ்டரை பணிந்தே மன்னிப்பு கேட்க
வசிஷ்டரும் இரங்கியே சாபத்தை குறைத்தார்
பூமியில் பறப்பது திண்ணமே ஆனால் சிறு மாற்றம்
குற்றம் புரிந்தவன் பல நாள் வாழ்ந்து புகழ் பெற
மற்றவர் உடனே விடுதலை அடைவர் என்றதும்

வசுக்கள் சென்றே கங்கையை வேண்டினர்
பூமியில் பிறந்தே நற் கணவனை அடைந்து
எங்களை பெற்று உடனே நீரில் வீழ்த்தி
எங்களுக்கு விடுதலை அளிப்பாய் என்றே

வசுக்கள் மீது கொண்ட இரக்கம் பூமியில் நானும் வந்தேன்
வசுக்கள் சாபம் தீர்க்க கொண்டேன் உன்னை மணாளனாக
வசுக்கள் சாப விமோசனம் பெறவே வீசினேன் அவர்களை கங்கையில்
எட்டாம் வசுவே இவன் பூமியில் புகழ்பட வாழ்வான்
அவனை வளர்த்தே உன் கையில் நானும் கொடுப்பேன்
என்றே கூறி கங்கையும் சென்றாள் குழந்தையுடன்


தொடரும்



பிதாமகர் பீஷ்மர் பார்ட் 1


அஸ்தினாபுரத்து மகா ராஜா சந்தனு என்றே பெயர்க் கொண்டே
அந்தி மயங்கிய வேளையிலே கங்கைக் கரையில் நின்றபடி
கங்கையின் எழிலை ரசிக்கையிலே
கண்டான் அழகே உருவான தேவதை ondrai
கொண்டான் காதல் அவள் எழிலில் மயங்கியே

கங்கையே அங்கு எழிலுருவாய் மானிடப் பெண்ணாய்
நிற்பதை அறியா சந்தனு காதலில் வயப்பட்டே
என் உயிர் என் உடல் என் தனம் என் அரசு அனைத்தும் உனக்கே
என்னை நீ மணம் புரிவாய் என்றே கெஞ்சினன்

உன்னை மணம் புரிவேன் ஆயின் இரு நிபந்தனை
சரியா என்று கேட்க காதலின் மோகத்தில் சரியென சொல்ல
கங்கையும் சொன்னாள் தன்னை யார் என கேட்கவும் கூடாது
தன் செயல் எதுவானாலும் ஏன் என கேட்கவும் கூடாது

காதலின் வயப்பட்ட சந்தனுவும் கங்கையின் நிபந்தனை தன்னை
மறுக்காமல் ஒப்புதல் அளித்தே மணமும் கொண்டான் அவளையே
இல்லறம் என்ற நல்லறத்தை இனிதே நடத்திய இருவருமே
அன்பில் திளைத்து ஆனந்தத்தில் மூழ்கிய தருணம்

கங்கையும் பெற்றாள் ஏழுக் குழந்தைகளை பெற்றதும்
குழந்தைகள் அனைவரையும் கங்கையில் தூக்கியே எறிந்துவிட்டாள்
கொடுத்த வாக்கிற்கிணங்கி மௌனமே காத்தான் சந்தனு மகாராஜா
மனதினில் பாரம் அழுத்தியது காரணம் ஏன் என புரியாமல்

நாட்கள் சென்றன கங்கையும் ஈன்றாள் எட்டாம் குழந்தை
ஈன்றதும் எடுத்தாள் குழந்தையை கங்கையில் வீச
பொறுமை இழந்த அரசனுமே காரணம் கேட்டே தடுக்க
கோபம் கொண்டாள் கங்கையவள் நோக்கினாள் அரசனை

வாக்குத் தவறி விட்டாய் மன்னா இனி நான் செல்கிறேன்
குழந்தையை நானே வளர்ப்பேன் சிறிது காலம்
பின்னர் ஒப்படைக்கிறேன் உன்னிடம் என்றே கூறி
கங்கையும் தன் இருப்பிடம் சென்று விடடாள்

Monday, October 25, 2010

எதையும் மதிப்போம்

நாம் உயர்வாக இருக்கும்போது
நம் உயர்வில் கர்வம் கொள்ளலாம்
பிறரை தாழ்வென்று எண்ணுதற்கு
நமக்கேது உரிமை
பிறரிலும் பல திறமை இருக்கலாம்

நம் மதம் சிறந்ததாக இருக்கலாம்
பிறர் மதத்தை இழிவு படுத்த நாம் யார்
அணைத்து மதங்களும் ஒரே போதனையை
சொல்லும்போது
பாதைகள் வேறாகலாம்
ஆனால் சேரிடம் ஒன்றன்றோ

இறைவனின் படைப்பில் நாம் பெரும்
அறிவுரைதான் எத்தனையோ இருக்க
புழுவையும் மதிக்க நாம் கற்றுக்
கொள்ள வேண்டுமே

Friday, October 22, 2010

பாடம் படிப்போம்

நதிகள் ஆயிரம் சேர்ந்தாலும் கடல் கரை புரண்டு ஓடுவதில்லையே
ஆறுகள் நீரைக் கொண்டு சேர்க்காவிட்டாலும் கடல் வற்றுவதில்லையே
இன்ப துன்பம் இரண்டுமே இணைந்தது வாழ்க்கையே என்று அறிந்தும்
இன்பம் வரும்போது கொக்கரித்தும் துன்பம் வரும்போது துவண்டும்
வருந்தும் மூட மனிதா சுக துக்கம் இரண்டையும் ஒன்றாக பாவித்து
சம நிலையில் இருக்கக் கற்றுக்கொள் என்று சொல்கிறதோ கடலுமே?

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அனைத்தையும் விலக்கினால்
மனிதன் மனிதாபிமானத்துடனும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் தான் ஏது துன்பம்
விட்டில் பூச்சிகள் சுகமாய் கூடி மகிழ்வாய் ஆடி பாடி பறந்து விளையாட
ஒரு விட்டில் பூச்சி விளக்கின் ஒளியில் மகிழ்ந்து அதில் தானே விழுந்து
மாண்டது போல் மனிதா நீயும் பெண்ணாசையில் மகிழ்தே உன்னை இழக்காதே
என்றே இந்த விட்டில் பூச்சி நமக்கு கூறும் அறிவுரையோ?

தினமும் அயர்ச்சியின்றி பூவிற்கு பூவாய்த் தாவி தாவி தேனீக்கள்
மதுவை உறிஞ்சி சேகரிக்க மானுடன் அதனை இரக்கமின்றியே
பறித்து தனக்கே பயன்படுத்த பாவம் தேனீ தன் தேவைக்கு மீறியே
சேகரித்த தேனை இழந்ததை போலே நாமும் ஆகக் கூடாது
தேவைக்கு மேலே பெறுவதை இல்லாதவருக்கு ஈயப் பழகுதல் வேணும்
தேவைக்கு மேலே சேர்த்தால் பறிபோய்விடும் என்பதை உணர்த்தும்
தேனீயின் செய்கை லோபியின் சொத்து பிறரிடம் சேரும் என்பதையும்
கூறாமல் கூறுகிறதோ?

குளவி ஒரு புழுவை கொட்டி கொட்டி குளவியாகவே மாற்றும்
குளவி போல் நாமும் இறைவனிடம் பக்தி காட்டி அன்பு செய்து
இறைவனாகவே ஆகமுடியும் என்பது குழவியின் போதனையோ?

சிறுவன் ஒருவன் கவலையின்றி ஆடி பாடி மகிழ்கிறான்
ஓடி ஓடி விளையாடுகிறான் கள்ளமில்லா வெள்ளை மனம்
காலத்தின் கோலத்தில் சிக்காத அன்பு மனம்
சிறுவனைப் போன்றே நாமும் கவலைகள் ஒழித்து
ஈசனிடம் அன்பு காட்டி அவன் அருள் பெறலாமா?

Thursday, October 21, 2010

மலைப்பாம்பு - ஒரு குரு (இயற்கை நமது குரு)


மலைப் பாம்பு எத்தனை நீளம் எத்தனை பருமன்
அதன் எடையோ மிக மிக அதிகம்
உடலுக்கேற்ற உணவு தேவையோ மிக அதிகம்
ஆனாலும் தானாக இரைத் தேடித் போவதில்லை
தனை நோக்கி வரும் பொருளை இரையாகக் கொள்கிறது
மலைப் பாம்பு முட்டையிட அதை காத்து குட்டி வரும்வரை
அது பட்டினியே கிடக்குதப்பா, தனை நாடி உணவேதும்
வாராத போதும் தன குட்டிக்காக பசி பொருக்குதப்பா
உணவேதும் கிடைக்கலேன்னா உயிரையே விடுகுதப்பா
அதைப் போலே அனைவரும் உடல் சுகம் தேடாது
உள்ளதை கொண்டு வாழ பழகனும்பா அப்போது
ஞானமும் கிட்டும்மப்பா

புறா - ஒரு குரு ( இயற்கை நமது குரு)


ஒரு அழகிய வனம் வித விதமான மரங்கள்
பூக்களும் கனிகளும் காண கண்கொள்ளக் காட்சி
மரக்கிளை ஒன்றில் ஜோடி பறவைகளின் களிஆட்டம் ( இயற்கை நமது குரு)
களிப்பில் வந்தன பறவையின் குஞ்சுகள்
குஞ்சுகள் பசியாற ஜோடியும் பறந்தன இரைத்தேட
குஞ்சுகளை கவனத்துடன் இருக்குமாறு கூறிவிட்டு
வேடன் ஒருவன் விரித்தான் வலையை புறாக்களை பிடிக்கவே
பெற்றோர் இரைத் தேடச் சென்றதுமே வாலுக் குஞ்சுகள்
பறக்கவே முயன்று வலையில் தானே சிக்கின
உணவுடன் வந்த தாய்ப் புறா கண்டது தம் குஞ்சுகளை வலையிலே
குஞ்சுகளுக்காக வருந்திய புறாவும் தானுமே வீழ்ந்தது வலையிலே
அடுத்து வந்த ஆண் புறாவுமே மனைவி மக்கள் வழியே சென்றது
பாவம் பெற்றோர் புறாக்கள் பாசத்தின் வலையில் வீழவே
தாங்களும் சிக்குண்டன வலையிலே - அதுபோல் நாமும்*
சம்சாரம் என்ற வலையிலே சிக்கி தவிக்கிறோம்
சம்சாரம் என்பது தேவையே தாமரை இல்லை தண்ணீர் போலே

avathootha geethayil kanda gurumaargal

அவதூதர் 24 குருமார்களிடம் பாடம் கற்றதாக கூறியுள்ளார் . இது அவதூத கீதை எனப்படும். இருபது நான்கு குருமார்களும் யார் என்றால் நாம் தினசரி காணும் வஸ்துக்களே. அதில் பூமி,காற்று, ஆகாயம், நீர் மற்றும் நெருப்பு, சந்திரன் சூரியன் புற, மலைப்பாம்பு, சமுத்ரம், விட்டில் பூச்சி, தேனீ, யானை, வேடன், மான், மீன், பிங்கலை என்ற வேசி , குர்ரரம் என்ற அழுகுரல் பறவை, பாலகன், கன்னிகை, கொல்லன், சர்ப்பம் , சிலந்தி, குளவி ஆகியவை ஆகும். இந்த கதை ஸ்ரீமத் பாகவதத்தில் அவதூத கீதை என்ற தலைப்பில் காணப்படுகிறது. தினமுமே நாம் காணும் ஒவொரு பொருளில் இருந்தும் ஏதேனும் பாடத்தை கற்றுக் கொண்டே இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிகும் நேரம் கிடைக்க வேண்டுமே.


சூரியன்

மாபெரும் நெருப்பு கோளம்
பூமியை விடவும் பெரியது
காலையில் கிழக்கே தோன்றி
மாலையில் மேற்க்கே மறையும்
கிழக்குக்கும் மேற்குக்கும் பயணிக்கும்
ஆரஞ்சு வண்ணம் கொண்ட சூரியனே
கோள்களில் ஒன்றான உன்னால்
இம்மானுடமும் உயிரினங்களும் அடையும்
பயன் தான் எண்ணிலும் அடங்குமோ
தாமரை மலர்வதும் பயிர்கள் செழிப்பதும்
உன் செயலால் அன்றோ
பூமியில் இருந்தே நீரதை குடித்தே
மீண்டும் மழையாய் பொழிவிக்கும்
பொழித்து பூமியை செழிப்பாக்கும்
செழிப்பாக்கி உயிர்களை வாழ வைக்கும்
உந்தன் கருணை தான் என்ன
தான் பெற்றதை தனக்கு தானே
என்று இல்லாமல் அனைவருக்கும்
பகிர்ந்து அளித்து மகிழ மகிழ்விக்க
நீ கூறும் நல்லுபதேசமோ
சொல்வாய் சூரியனே
உன் தாள் பணிகிறேன்
இவ்வுலகில் அனைவரும் நலமாய் வழ
தொடரட்டும் உன் இனிய பணியே

Wednesday, October 20, 2010

இயற்கை நமது குரு - 2

நிலவு என்றாலே நினைவுக்கு வருவது குளிர்ச்சி
நிலவுக்கு உண்டு வளர்வதும் தேய்வதும்
ஆனால் அது நிலவின் குணமன்று
இப்பரினாமம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பே
நிலவைப் போன்றதே நம் உடலும்
வளர்வதும் இல்லைப்பதும் உடலின் குணங்களே
ஆத்மா அழியாதது மாறாதது - இது
நிலவு கற்றுத் தரும் பாடம்.

விண்

விண் எனப்படுவதே ஆகாயம்
எங்கும் நிறைந்தது ஆகாயம்
நிர்மலமானது ஆகாயம்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கும் நிறைந்தாற்போல்
விண்ணும் எங்கும் நீக்கமற
நிறைந்துள்ளதே அது
நம்முள்ளும் இருகிறதே
ஆகாயத்தைப் போன்றே
பரமாத்மா சொரூபமும்
உள்ளும் புறமும் எப்போதும்
எங்கேயும் நிறைந்துள்ளதுபோல்
இனிய குணங்களோடு
நிர்மல மனதோடு எல்லாம் வல்ல
இறைவனை நம்முள்ளும் காண்போம்

காற்று

காற்றிடமிருந்தே கற்பது என்ன
காற்றில்லாத இடமும் உண்டோ
உணவே இல்லாவிட்டாலும் ஏன்
நீரே இல்லாவிட்டாலும்
ஒரு சில மணிகள் உயிர் வாழலாம்
ஆனால் காற்றின்றி எப்படி வாழ்வோம்

காற்று எங்குதான் செல்லட்டுமே
நறுமணமிக்க பூக்களின் தோட்டத்தில்
நறுமணத்தை பரப்பும்
அழுகிய குப்பைகள் இருக்குமிடத்தே
துர்நாற்றத்தை பரப்பும்

நாற்றமும் துர்நாற்றமும்
பாதிப்பது நம்மையே ஆனால்
காற்றுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை
அப்பழுக்கற்ற காற்றைப்போல்
ஆத்மஸ்வரூபமும் சரீர குணங்களால்
பாதிக்கப்படுவதில்லை

இதுவே காற்று கற்பிக்கும் பாடம்
உணர்ந்தே நாமும் வாழுவோம்
காற்றை போல்
காற்றின் குணாதிசயத்துடன்

neruppu

நெருப்பு பஞ்ச பூதங்களின் மூன்றாவது பூதம்
எத்தனை ஒளி மிக்கது தனக்கென உருவமற்றது
தன்னால் எரியும் பொருளாகவே மாறுவது
பரிசுத்தமானது. தனக்குள் விழும் அத்தனையும்
விழுங்கும் நெருப்பு எதனாலும் பாதிப்படையாதே
மாசும் அடையாது எத்தனையோ பயன் காண்கிறோம்
இறைவனுக்கு அர்ப்பிக்க நெருப்பினால் ஹோமம் வளர்த்து அர்ப்பிக்கிறோம் அத்தனை புனிதன் நெருப்பு
தனக்குள் விழும் பொருளாகவே தான் மாறும் நெருப்பைப் போல்
ஆத்மா அந்தந்த சரீரத்தில் அந்தந்த உருவாக தோற்றமடையுமே
நெருப்பினைப் போன்றே ஞானி தான் செல்லும் இடத்தை
புனிதபடுத்துவதே போல் நாம் செல்லும் இடமும் புனிதமாக
நெருப்பை போல் பரிசுத்தமாக இருக்க முயற்சிப்போமே
அடுத்து தொடரும் காற்றின் அருமை

நீர்

நீர் தண்ணீர் பெயரிலேயே தன்மையைக் கொண்டவள்
பரிசுத்தமானவள், இனிமையானவள் அவளால் எத்தனை நன்மை
உயிர்களுக்கு உயிர்வாழ் இனங்களுக்கு
நீரின்றி அமையாது உலகு என்பது அல்லவோ பெரியோர் மொழி
உடல் தூய்மைக்கு நீர் தேவை உணவு சமைக்க நீர் தேவை
பயிர்களுக்கு நீர் தேவை எத்தனை தேவைகளை பூர்த்தி செய்கிறாள்
நீரோடும் நதி அழகு புண்ணியத் தீர்த்தமது அதில் நீராடினால்
பாவங்கள் போகும் புண்ணியமும் சேரும் அவளைப் போல்
புனிதராகவும் புனிதப்படுத்துபவராகவும் நாம் இருக்க வேண்டும்
என்பதே அவள் கற்று தரும் பாடம்
புனிதராகலாம் புனிதப்படுத்தலாம்
அடுத்தது நெருப்பிடம் பாடம் கற்கலாம்

Tuesday, October 19, 2010

இயற்கை நமது குரு


இயற்கை தான் எத்தனை அழகு - அவை
கற்றுத் தரும் பாடம் தான் எவ்வளவு
விண்ணும், காற்றும் நெருப்பும்
நீரும் நிலமும் இயற்கையன்றோ
அதில் நாம் கற்கும் பாடம் இவையன்றோ

பூமி ஆஹா பூமியை நினைத்தால் எத்தனை பெருமிதம்
அவளோ பஞ்ச பூதங்களில் கடைசி பூதம்
என்னே அவளது பொறுமை என்னே அவளது பெருமை
வெட்டி, கிளறி, தூர் வாரி, மிதித்து இத்தனை நாம் செய்யினும்
அவளோ நமக்கு உயிராகிய பயிரை கனிகளை கைகளை
அல்லவோ நமக்கு வாரி வாரி வழங்குகிறாள்
அவளிடம் நாம் பொறுமையை கற்கலாம்
இன்ன செய்தார்க்கும் இனியவையே செய்யலாம்
நீரைப் பற்றி அடுத்து சொல்கிறேன்

ராமக் காதை தோற்றம்

சூரியக் குலத் தோன்றாலாம் ராமனை நாரதர் புகழ் பாட
அதைக் கேட்ட வால்மீகியும் பரவசத்தில் மூழ்கினார்
சீடர் பரத்வாஜருடன் தமசி நதியில் நீராட செல்கையில்
ஆணும் பெண்ணுமாய் அன்றில் பறவை இரண்டு
ஒன்று கலந்து உறவாடி விளையாடி மகிழ்ந்துக் கொண்டிருக்க
எங்கிருந்தோ வந்த வேடன் அதைக் குறி பாரதி அம்பெய்த
அந்தகோ ஆண் பறவை இரத்தம் பெருக கீழே விழுந்து மாண்டது
துணையை இழந்த பெண் பறவை துக்கம் தாளாமல் கலங்கியது
இக்காட்சியைக் கண்ட முனிவரின் மனமும் இளகியது
பறவை மேல் கொண்ட இரக்கம் கோபமாய் உருவெடுக்க
அடே வேடா ஆண் பறவையைக் கொன்ற நீ ஓரிடத்தில்
நில்லாமல் அலைந்து திரியக் கடவாய் என்றே சபித்தார்
கோபத்தில் கொடுத்த சாபம், கோபம் தெளிந்தப் பின்
வருத்தத்தில் ஆழ்ந்து மீண்டும் மீண்டும் அதிலேயே சுற்றி வர
சாபம் போல் தோன்றிய வார்த்தைகள் பாடலாக புலப்பட
அதிலே நிலைத்து நினைந்து உறைந்து போக
பிரமனும் தோன்றி மேலும் பல கவிதைகள் இது போல்
புனைவாய் அதற்க்கான முன்னோட்டமே இது என
கூறி ராம காதையை படைக்கும்படி அருளிச் செய்ய
நமக்கு கிடைத்ததோ அருமையான ராம காவியம்
வால்மீகி ராமாயணம், படித்தே மகிழ்வோம் நாளுமே
வால்மீகி

மகரிஷி கிருனு தவமது புரிகையில்
கண்களில் வீரியம் பெருக
அதை சுவைத்த பாம்பொன்று
குழந்தை ஒன்றை ஈன்றது

வேடர்கள் குழந்தையைப் பார்க்க
எடுத்து வளர்த்தனர் அன்போடு
பெயரும் இட்டனர் ரிட்சன் என்று
அலாகே உருவான ரிட்சன்

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் வளர்ந்தான் ரிட்சன்
வேடுவ பெண்ணை மணந்தே
குழந்தைகளை ஈன்றான்

வேடுவர் வளர்த்த குழந்தையன்றோ
வேடுவ குலத் தொழிலாம்
விலங்குகளை கொன்றும் வழிப்பறி என்றும்
வாழ்க்கையை நடத்தி வர

ஒரு நாள் சப்த ரிஷிகள் வர
அவர்களை வழிப் பறி செய்தான்
வழிப் பறி பாவம் விட்டு விடு
என ரிஷிகள் சொன்னதை மறுத்து

தம் சொந்தம் சுற்றம் என் செய்வர்
என்றே வினவ, ரிஷிகள் கூறினார்
வேடனே சென்று நீ கேட்டு வா
உன் சுற்றம் உன் பாவத்தை ஏற்குமோ

என்றவுடன் வேடனும் ஓடினான்
சுற்றத்தை கேட்டான் பாவத்தில் பங்கு கொள்ள
சுற்றம் மறுக்கவும் உணர்ந்தான் உண்மையை
தஞ்சமே என்று வீழ்ந்தான் ரிஷிகளின் பாதங்களில்

திருந்திய வேடனுக்கு ஆவணில் அறிவித்து
"மரா" என்ற மந்திரத்தை உபதேசித்து
மரா மரா என்றே ஜபித்து வா என்றனர் ரிஷிகள்
ஒருமையுடன் ஜெபத்தில் ஆழ்ந்தான் வேடனுமே

காலம் சென்றது, மீண்டும் வந்தனர்
ரிஷிகள் அங்கே புற்றிலிருந்து
மீட்டனர் ரிட்சனை மரா ஜபம்
ராம சாபமாகி பாபமும் தொலைந்தது

ஞானி என்றே கூறினார் ரிட்சனை
வால்மீகி என்றும் பெயரிட்டு கௌரவிக்க
சீடரும் பலர் ஏற்பட்டனர் இதுவே
ரிட்சன் வால்மீகி ஆன கதை.

Monday, October 18, 2010

உத்தம புருஷர் யார்?

தர்ம நியாயம் தெரிந்திருக்க
நன்றி மறவாமல் உதவி மிக
சிறிதே ஆனாலும் பெரிதாய்
நினைக்கும் பெருந்தன்மையோடு
நல்லொழுக்கம் கொண்டு
சத்தியம் தவறாது
கண்டவர் வியக்கும் பேரழகோடு
கோபம் கடுஞ்சொல் இல்லாமல்
எதிரிகளையும் தம் குணங்களால்
அஞ்ச வைக்கும் ஆற்றலோடு
நாம் இருந்தால் நாம்
உத்தம புருஷரே - ஆனால்
இத்தனை குணங்களும்
ஒரு சேர கொண்ட ஒரிதயமாகில்
இருந்தால் அது நமக்கு
கொண்டாட்டமே இத்தகு
குணங்களை கொண்ட ஒரு
இதயத்தை நாரதர் காட்ட
வால்மீகியும் வடித்தது
ராமாயணமே
ராமனும் ஆமே கதாநாயகன்.

Thaalaattu

ஆராரோ ஆரீராரோ யாராரோ வந்தாரே
ஆத்தாத்தா வந்தா அவளோடே ஆடினே
அப்பாத்தா வந்தா அவளோடே ஆடினே
மாமன்கார வந்தான் அவனோடே ஆடினே
அத்தேக்காரி வந்தா அவளோடு ஆடினே
எல்லோரோடு ஆடி விட்டு இப்பத்தா கூவுரே
என் புருஷ சினுன்கிரா சீகிரந்தான் தூங்கேண்டா
இதனை பாடு பாடிட்டே இன்னு உனக்கு என்னடா
சீக்கிரமே தூங்கடா ராமன் கதே சொல்றேன்
தசரத ராமன் கௌசல்யா ராமன் விச்வமித்ரநோடே
உபயத்தாலே சீதையை மணந்தானடா
கைகேயி சூழ்ச்சியாலே கானகமே சென்றாண்டா
அனும சுக்ரீவ விபீஷன மற்றும் வானர சேனை
பலத்தோடு ராவணனை கொன்றாண்டா
மீண்டு அயோத்யா வந்து பட்டம் ஏற்றாண்டா
ஆராரோ ஆரீராரோ தூங்கடா கண்ணா
ராமன் கதையும் முடிந்தது
குழந்தையும் தூங்கியது
ஏன் கணவருமே - எரிச்சலுடன் தாய் சென்றால்
படுக்கைக்கே

Wednesday, October 13, 2010

எது சுகம்

தோளிலே முகம் புதைத்து விம்மும்போது
மனம் அறிந்து துயர் துடைக்க
நேசமிக்க கணவரின் தலை வருடல்
சுகமோ சுகம்

அழகான மாலைப் பொழுதில்
இணையாக ஜோடி சேர்ந்து
இயற்கையை ரசிக்கும்போது
செல்லமாக தட்டி செல்லும்
சில்லென்ற காற்று
சுகமோ சுகம்

கடற்கரையில் நிற்கையிலே
அலைப் பெண்களின் அட்டகாசம்
ரசித்துக் கொண்டிருக்கும்போதே
தஞ்சமென சரண் அடைந்தாற்போல்
பாதத்தை வருடுவதும்
சுகமோ சுகம்

காலையில் சென்று
மாலையில் திரும்ப
களைப்பே இருப்பினும்
காலைக் கட்டிக் கொண்டு
கொஞ்சிடும் மழலையின்
அணைப்பும் சுகமோ சுகம்

இத்தனை சுகம் இருந்தாலும்
அத்தனைக்கும் சிகரம்
உடல் தூய்மையோடு
உளத் தூய்மைக் கொண்டு
வாழப் பழக அவ்வாழ்க்கை
சுகமோ சுகம் சுகமோ சுகம்
என்னவென்று சொல்வேன்
இச்சுகத்தை.

Tuesday, October 12, 2010

உத்தம தர்மம் எது?

குருக்ஷேத்ரப் போர் முடிந்தது
தருமரும் அரியணை ஏறினார்
பட்டம் ஏற்றப் பின்
ராஜ சூய வேள்வியும் நடந்தது
வேள்வி முடிந்து அனைவரும்
கலைந்த பின் வேள்வியைப் பற்றி
புகழ் மாலைகள் பல வந்து
குவிந்த வண்ணம் இருந்தது
கேள்விப் பட்ட கீரி ஒன்று
வேள்வி நடந்த இடத்தில்
புரண்டு புரண்டு வந்தது
ஆனால் ஆயாசத்துடன்
உச் உச் என்றது அதைப்
பார்த்த தர்மரும் கீரியை
அழைத்து அணைத்து பரிவுடன்
என்ன வேண்டும் என்று கேட்க
ஹூம் உம்மால் முடியாது
என்றது கீரி - வியப்புடன்
தருமரும் கீரியைப் பார்க்க
கீரி சொன்னது தன கதையை
அய்யா தர்மரே என்னைப் பாரும்
என் ஒரு பக்கத் தங்க நிறத்தை
உமது அரிய பெரிய குணங்களைக்
கேட்டு ஆவலாய் வந்தேன் -
ஏமாற்றமே மிச்சம் என ஆரம்பித்த
கீரியை பார்த்தார் வியப்பு நீங்காமலே
புரியவில்லை விளக்கமாக சொல்
என கீரியை கேட்க அதுவும் சொன்னது
நான் ஒரு வயோதிக தம்பதியினரின்
வீட்டில் கண்டேன்ஒரு காட்சி
வயது முதிர்ந்த பெற்றோருடன்
இருந்தனர் இரு பிள்ளைகள்.
அன்றைய உணவு திணைமா தான்
உணவு அருந்த அமர்ந்த போது
ஒரு அந்தணர் வந்தார் அங்கே
பசி என சொல்லி இளைப்பாற
கொஞ்சம் கேட்டார்.
வயதில் மூத்த பெரியவர் மற்றவர்
கொடுக்க முன் வந்தும் தன்
பங்கினை முன்னம் ஈந்தார்
போதவில்லை என்று மீண்டும் கேட்க
அம்முதியவர் மனைவி தன் பங்கை ஈந்தார்.
மீண்டும் மீண்டும் என்று கேட்ட போது
அப்பிள்ளைகள் இருவரும் தம்
பங்கை ஈந்தனர்.
நால்வரும் தான் தான் கொடுப்பேன்
தான் தான் கொடுப்பேன் என்று
போட்டியிட்டு அனைவரும் தம் தம்
பங்கை கொடுக்க
அந்தணர் ரூபத்தில் வந்த
இறைவனும் அவர்களை
அழகான விமானத்தில் வைகுந்தம்
அழைத்துச் சென்றார்.
அங்கே சிந்திய மாவில் புரண்டதில்
ஒரு பாதி பொன்னிறம் ஆயிற்று
மறு பாதிக்கு இங்கு வந்தேன்
இப்போது சொல் அரசே
நான் கேட்டதை உன்னால்
கொடுக்க முடியுமா என்றே
கீரியும் கேட்டது தருமரை
வெட்கத்தினால் தலை குனிந்தார்
தருமருமே


நாம் என்றும் அடிமைகளே

ஞானியின் குருகுலம் மரத்தடி நிழலிலே
சீடர்கள் குழுமினர் வேத பாடம் கற்க
ஞானியும் வந்தார் பாடத்தை தொடங்கினார்
பூனை ஒன்று குறுக்கிலும் நெடுக்கிலும் ஓட
சீடர்கள் கவனம் திசை திரும்பியது
ஞானி சொன்னார் ஒரு சீடரிடம்
பூனையை பிடித்து கட்டு என்றே
தினமும் பூனை குறுக்கே வரவும்
இதுவே தினமும் வாடிக்கைஆச்சு
காலம் சென்றது ஞானியும் அடைந்தார்
இறைவனின் திருவடி - ஞானியின் பாடம்
கேட்ட பூனையும் அவர் வழி சென்றது
சீடரில் மூத்தவர் ஞானியின் பீடத்தில்
வழக்கம் போல் கூடினர் சீடர் குழாமுமே
பாடம் தொடங்கும் முன் பார்த்தால்
பூனையைக் கட்டும் கம்பம் வெறுமை
பார்த்தார் ஞானி , உடனே சீடரை அழைத்து
பூனையை சீக்கிரம் கொண்டு வந்து கட்டுங்கள்
பாடம் நடத்த நேரமாச்சு என்றார்
காரணம் அறியாது, அறியவும் முயலாது
முன்னம் நடந்ததை பழக்கம் என கருதிய
புதிய ஞானியைப் போன்றே
விளக்கம் காணாது பழக்கம் வழி நடக்கும்
அனைவரும் மூட நம்பிக்கைக்கு அடிமைகளே!

Saturday, October 9, 2010

பழமொழி 2

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்

இதற்கும் பொதுவாக நாம் கொள்ளும் அர்த்தமே வேறு

ஆனால் என் வகுப்பில் சொல்லிக் கொடுத்தது
திருமணம் ஆகி முதல் அறுபது நாட்கள் ஆசை இன்னும் முப்பது நாட்கள் மோகம் என்ற வகையில் கணவன் மனைவி திருமண பந்தத்தின் புது உறவை ரசித்து அனுபவிக்கலாம். பின்னர் கணவன் மனைவியின் கூடல் ஒரு நெறிமுறையோடு இருக்க வேண்டும். அதாவது தாம்பத்யம் என்பது மாதத்தில் இரண்டு முறை தான் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் உடல் நலம் வாழ்க்கை நலம் அனைத்தும் மிக சீராக இருக்கும்.

பழமொழி

ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

இந்த பழமொழியை யார் எப்படி புரிந்துக் கொள்கிறார்களோ தெரியாது. நான் செல்லும் ஆன்மீக வகுப்பில் என் ஆசானால் சொல்லப்பட்ட அற்புதமான விளக்கம் இதோ
ஆணை = ஆ நெய் பசுவின் நெய் பசுவின் நெய் நாம் அதிக அளவில் சிறு வயதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
பூனை = பூ நெய் பூவிலிருந்து கிடைக்கும் நெய் அதாவது தேன் நாற்பது வயதுக்குப் பின் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது தான் மேற்சொன்ன பழமொழிக்கு அர்த்தம்.

பரம்பொருளே உனக்கோர் மடல்

கரும வினையை தீர்க்க
பிறவி பயனை அடைய
உடலைக் கொடுத்த இறைவா
மடலை வரைகிறேன் உனக்கே

உடலைக் கொடுத்தாய் ஊனம் இன்றி
பொருளைக் கொடுத்தாய் நலமாய் வாழ
வாழ்க்கையை கொடுத்தாய் வாழ்ந்து பார்க்க
அறிவைக் கொடுத்தாய் உன்னை அறிய

அழகான வீடு, அற்புதமான கணவர்
அருமையான பிள்ளைச் செல்வங்கள்
அளவோடு பொருள் வளம் பொன் வளம்
அனைத்துக்கும் மேலான போதும் என்ற நிறை மனம்

இத்தனையும் அளித்த என் இறைவா
அத்தனைக்கும் நன்றிதான் பாராட்டினேன்
என்னிடம் ஏதும் குறை கண்டாயோ
பின் ஏன் இந்த சோதனை

நீ எனக்கு வைக்கும் பரீட்சையோ
அல்லது என் உள்ளொளிப் பயணத்துக்கு தீட்சையோ
அறிகிலேன் அறிவிலி நான்
என்னை தடுத்தாட் கொள் இறைவா
பின் ஏன்

Friday, October 8, 2010

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்


எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்

ஞ்சனாய் இராதே
போல் வளைந்துக் கொடு
த்தியம் பேசு
ஞான மார்க்கம் தேடு
ம்பம் வேண்டாம்
ண்ணியம் காட்டு
ண்மையாய் வாழ்
ன்மையை செய்
வ்யமாக இரு
ந்தமாய் இராதே
யாசிக்காதே அன்பைக் கூட
ம்மியமான இயற்க்கையை நேசி
க்ஷத்தில் ஒருவனாய் இரு
ணக்கமாய் இரு
குவதில் இனிமை காட்டு
வு முறை எதிலும் கடை பிடி
க்க பழகு பிறர் செய்யூம் தீமையை
தை நீ ஆள பழகு அதை ஆள விடாதே

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - உயிரெழுத்து வரிசையில்


அனைவரிடமும் அன்புக் காட்டு
ஆசையை சீரமைத்துக் கொள்
இன்பத்தில் அதிக ஆசை வேண்டாம்
ஈகையில் ஈடுபாடு கொள்
உன் உயர்வில் உன்மத்தம் கொள்ளாதே
ஊழ்வினை போக்க செயலாற்று
எங்கும் நீக்கமற உள்ள பரம்பொருளை உணர்
ஏற்றமாய் நினைத்து அதை கொண்டாடு
ஐயம் திரிபற உணர்வாய்
ஒருமையுடன் அவனது திருவடி நினைத்தால்
ஓங்கியே வாழ்வாங்கு வாழலாம்
ஔடதம் என்பது இல்லாமல்
அக்ஹ்தே உன் வாழ்கை பாதை ஆகட்டும்

வாழ்க்கை

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே - ஆனால்
வாழ்வதெல்லாம் வாழ்க்கை தானா
வாழும் வாழ்க்கையில் பயனுண்டா
வாழ்த்துக்கள் பலவும் உனக்குண்டா

நித்தம் நித்தம் செய்தது என்ன என்றே
சித்தம் கலங்காது யோசித்தே - கண்டேன்
நிதமும் உண்டு, உறங்கி, உறங்கி உண்டு
வேறு என்ன சாதித்தோம் - இது வாழ்க்கையா

இது நாள் வாழ்க்கை வீணாகி போனது
இதையே நினைத்து கலங்காதே
இனியும் நாளை கடத்தாதே
இனிதே தொடங்கு இன்று முதல்
என்றே செய்தேன் முடிவினை
நன்றே வரைந்தேன் நெறிமுறை
இன்றே நானும் செயல்படுத்த
சற்றே பொறுங்களேன் அடுத்த - போஸ்ட்க்கு

ரசனை

இயற்கையின் அழகே அழகு,
விடியற்காலை பறவையின் கீச் கீச் ஒலி செவிக்கழகு
தோட்டத்து பூக்களின் வித வித வண்ணம் அழகோ அழகு
பூவினை சுற்றும் வண்ணத்து பூச்சியும் அழகு
மரத்தில் காய்த்துத் தொங்கும் கனிகளோ மிக அழகு
காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அழகு தான் என்ன
பசு தன் கன்றை நாவால் தடவிக் கொடுக்கும் தாய்மையும் அழகு
யாரை ஏமாற்றலாம் என்று பார்த்துக் கொண்டு நிற்கும் பூனையும் அழகு
போடுவது ஒரு சிறு பிஸ்கட் துண்டு ஆனாலும் நாய் வாலை ஆட்டும் அழகே அழகு
இன்னும் எத்தனை எத்தனை அழகுகள் இயற்கைக்கு
அனைத்தையும் ரசிக்க நேரம் தான் இல்லையே
வீணாக்க வேண்டாமே ஒரு க்ஷண பொழுதையும்
இனி காணலாம் கண் கொண்டு எதிரில் நடக்கும் நிகழ்ச்சியை
ரசிப்போம் அனுபவிப்போம் கொண்டாடுவோம்.

Tuesday, October 5, 2010

ஒரு தேடல்

ஒரு தேடல்

நான் யார்?
இது என்ன கேள்வி? நான் ஒரு மனிதன்
மனிதன் என்றால்? எதை கூறுகிறாய்?
உயிரா உடலா மனமா

உடல் தான் மனிதன் என்றால்
உயிர் போன பிறகு அது சவம் அன்றோ
பின் இந்த உயிர் தான் மனிதனா
உடலற்ற உயிர் ஆவி அன்றோ

மற்று உடலும் உயிரும் சேர்ந்தது தான் மனிதன்
ஓ இதுவும் தவறு தான்
உயிரினங்கள் அனைத்துக்கும்
உடலும் உண்டு உயிரும் உண்டு
அவைகளை மனிதன் என்பதில்லையே

பின் என்ன தான் செய்வது
மனம் தான் மனிதனா
மனம் அனைவருக்கும் தான் உள்ளது
அது நல்லதை நினைக்கிறதா அல்ல
அல்லதை நினைக்கிறதா என்பது
தெரியாத போது அதை மனிதன்
என்று ஒப்புக் கொள்ள முடியாது
மூன்றும் இருந்தும் மனிதன் அல்ல
மனம் + இதன் தான் மனிதன்
இதமாக இருக்க பழகினால்
மனிதன் ஆகலாம் இல்லையேல்
விலங்கு தான் - அந்தகோ -
பாவம் விலங்குகள் - அவை
நம்மை விட மேலானவை
அவற்றிற்கு ஆறாவது அறிவு இல்லை
என்பது உண்மைதான்
ஆனால் ஒரு தேர்வு
ஒரு மனிதனை கண்ணை கட்டியும்
ஒரு பசு மாட்டையும் ஓட்டிச் சென்று
புதிதாக ஒரு இடத்தில் விட்டு விட்டு
வந்தால் பசு மாடு மீண்டும்
புறப்பட்ட இடத்திற்கே வந்து விடும்
ஆனால் மனிதனால் முடியாது
ஏனெனில் பசுவிற்கு லோகாதய
விஷயங்களில் ஈடுபாடு கிடையாது
ஆனால் மனிதன் அப்படி அல்ல
இறைவன் தந்த ஆறாம் அறிவால்
இறைவனை அறிவோம்
செய்யும் செயல்கள்
இறைவனுக்கே அற்பித்து
எங்கு இருந்து வந்தோமோ
அங்கேயே போவோம்
மனிதனாக வாழ்வோம்
மனித நேயம் வளர்ப்போம்
இறைவனை அறிவோம்
இறையோடு ஒன்றுவோம்

தேடல் தொடரும் .

Friday, October 1, 2010

மனம்

அலைபாயும் மனத்தை அடக்கியே பார்த்தேன்
அந்தகோ பரிதாபம் என்று ஒரு குரல் கேட்டேன்
திரும்பி பார்த்தால் ஒருவரும் இல்லையே
ஆனால் மீண்டும் ஓர் சிரிப்பலை
புரியத்தான் இல்லையே - இந்த நையாண்டி
யார் என்று குழம்பித் தான் போனேன் ஒரு வினாடி
திடீரென ஒரு மின்னல் பளிச் பளிச் என் மண்டையில்
நையாண்டி மேளம் செய்தது என் மனமோ என்று
உடனே கேட்டேன் மனதை _ நீயா என்று
ஆமாம் அசடே நான் தான் என்றது
ஒரு புறம் அழுகை ஒருபுறம் கோபம்
என்ன திமிரா நையாண்டி ஏன் என்றேன்
என் அழுகையில் கரைந்த என் மனம் சொன்னது
என்னை அடக்க நினைக்காதே நான் அடங்க மாட்டேன்
என்னை அறிய நினையேன், நீ வேறு நான் வேறு அல்ல
என்பதை உணர்வாயே என்றது மனமே
முயற்சி செய்கிறேன் மனமே உனை அறிய தினமே
என்று முயற்சியை ஆரம்பித்தேன்.
ஹாய் என்ன குறட்டை காலை வேளையில்
என்ற கணவரின் குரல் கேட்டு எழுந்தால்
மீண்டும் கேட்டது மனத்தின் நையாண்டி

Sunday, April 25, 2010

I am relaxed , I am relaxed
My joys knew no bounds
Relief is going to come to me
On 30th April of this year

I am independent, I am independent
I am going to breath freely
No hurry, No worry
from 30th April this year

I am free I am free
No tension No confusion
'cause I am going to be relieved
On 30th April this year

All these years I enjoyed serving
the Government
So will be the enjoyment
in the years to come.

Let me do everything
that is liked by me
let me fly like a bird
Let me shine as star

Let my rest of life
be of free from bondage
Let me enjoy the
nature, Nature

Friday, April 23, 2010

receipe for Ridge gourd chutney and dal (Two in one)

Ingredients:
One Large Ridge Gourd
One Tablespoon of Black gram
One Tablespoon of Bengal Gram
6 or 7 Red chillies or according to the requirement of Hot
A small ball of tamarind
Asafatodia Powder
One tablespoon of gingilie oil

Preparation:

Wash the Ridge gourd, Peel the skin. Then cut the ridge gourd into pieces without seeds
Keep it separately. Then cut the skin of gourd into fine pieces. Keep it separately.

Place the pan on the stove, pour a teaspoon of oil, put the black gram, Bengal gram, red chillies, and fry them to golden colour and allow it to cool for two to three minutes, Then pour another teaspoonful of oil and fry the skin of gourd till it cooks. Leave it for two to three minutes. Then grind the dals with chillies, salt asafatoedia. Then add the fried gourd skin with tamarind and grind them.

Then put the remaining oil into the pan, put muster seeds, urud dal and leave it to fry then put the ground chutney and stir and allow it to cook for two minutes. A delicious chutney is ready.


Ridge Gourd dal

Toor dal one table spoon
one green chillie
one teaspoon oil
lemon juice from half lemon
turmeric powder one pinch
muster seeds half tea spoon
urud dal one tea spoon
asafatoadia
salt

Cook the toor dal in cooker. Cook the ridge gourd flesh.
Put the pan on stove, pour oil, allow it heat. then put mustard seed, urud dal, finely cut green chilli curry leaves, turmeric powder, asafatodia , Then put the cooked gourd, then cooked tour dal, and allow it to boil for one minute put turneric powder salt, and lemon juice. .A Tasty dal is ready. May be used as side dish to chappathi also.

Please try and taste it.